Sunday, December 24, 2017

'சங்கொலி'

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அழைக்கும் காலம் விரைவில் வரும் என வைகோ இப்போது சொல்வதை 25 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் தற்போது திண்டுக்கல் லியோனியின் இடத்தை வை.கோபாலசாமி பிடித்திருக்கலாம்.
தேவையில்லாமல் வை.கோபாலசாமி வைகோவாக பெயர் மாறியிருக்கவும் தேவையில்லை, இவரை கட்சியை விட்டு நீக்கியதற்காக 6 தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கவும் தேவையில்லை.
அரசியல் களத்தில் survival of the fittest என்ற தியரியை வைத்து பார்க்கும்போது நடிகர் கார்த்திக், டி.ராஜேந்தரை விட வைகோ சற்று திறமையாளராகவே தெரிகிறார்.
ஆனால் எதிர்காலத்தை கணிக்கும் நாஸ்டர்டாமஸ் போல தன் எதிர்காலத்தையும் முன்பே கண்டறிந்து கடந்த ஆண்டே சொல்லிவிட்டு போயிருக்கிறார் வைகோ. "ஈழ படுகொலை செய்த, 2G ஊழல் செய்த திமுகவுடன் தமிழ் உணர்வு உள்ள எவனாவது கூட்டணி வைப்பானா? அந்த அளவிற்கு தமிழுணர்ச்சி செத்துப்போய் விட்டதா?" என வைகோ முன்பே கணித்திருக்கிறார்.
சங்கொலி சத்தம் கேட்கிறது. 'சங்கொலி' அவர் கட்சி பத்திரிக்கையின் பெயர். மக்களுக்கு கிடைத்திருக்கும் பதில்.
வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க!
அடுத்த தலைவர் உதயநிதியும் வாழ்க!
எந்த நிலை வந்தாலும் திமுகவிற்கு போகமாட்டான்
அதிமுககாரன்....
அதாண்டா அதிமுக கெத்து.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...