1. தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக் காற்றுக்காக எவ்வளவு தவிப்பானோ, கடவுளைக் காணவும் அவ்வளவு தீவிர தவிப்பு வேண்டும்.
2. உணவுக்காக அலைவது மாத்திரம் மனிதப் பிறவியின் நோக்கம் இல்லை. இறைவனை அடைவதே மனிதனின் நிறைவான லட்சியமாக இருக்க வேண்டும்.
3. பொறாமை கூடவே கூடாது.
4. சத்தியத்தின் வழி நடப்பதும் உண்மையே பேசுவதும் தவம்.
5. சாமானியனாக இருந்தாலும், சந்நியாசியாக இருந்தாலும், புகழின் மீது இருக்கும் ஆர்வம் அலாதியானது. அது பேராசையை ஏற்படுத்தி விடும். புகழின் மீது இருக்கும் ஆவலை துளி கூட வளர விடக் கூடாது.
6. முருகனின் பக்தர்களுக்கு அமுது படைத்தல், அன்னதானம் செய்தல் போன்றவை மகத்தான புண்ணியம் சேர்க்கும்.
7. என் பொருட்டு நிந்திக்கப்படுவோரையும் முருகன் அருள் காக்கும்.
ஏக தெய்வமாக முருகனைத் தீவிரமாக பற்றிக் கொண்டவர்களை வேலும், மயிலும் காக்கும்.
ஏக தெய்வமாக முருகனைத் தீவிரமாக பற்றிக் கொண்டவர்களை வேலும், மயிலும் காக்கும்.
No comments:
Post a Comment