Saturday, December 30, 2017

உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்.


கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல்
நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..
• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு
தெளித்து கொள்ள வேண்டும் ...
• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு
முதலில் கோபுரத்தையும்
அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...
• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
• அந்த படியை தாண்டும் போது,
" நான் கொண்டு வந்த
எதிர்மறை வினைகள்,
எதிர்மறை எண்ணங்கள்,
கெட்டசெயல்கள்,
கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..
• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசீர்வாதமும்,
நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...
• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...
• ஒரு கோயில் என்பது
நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும்,
நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும்,
முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...
• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள்
என்று வாழ்த்துகிறேன்.
செய்வீர்களா.?
கோவிலில் பெரியவர் சொன்ன விளக்கங்கள் உங்களுக்காக.
எல்லாம் முருகன் செயல்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...