தொண்டர்கள் எவ்வளவு கூறியும் தேவையில்லாமல் RK நகரில் போட்டியிட்டு அசிங்கப்படுத்திவிட்டார்.
ஒரே வருடத்தில் தினகரன் தமிழகத்தின் முக்கிய தலைவராக உருவெடுக்கிறார் என்றால் அதற்காக அவர் தெருத் தெருவாக சென்று செய்த களப்பணியும், தைரியமான பேச்சும், மீடியா வெளிச்சமும் தான் முக்கிய காரணம்.
ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. கட்சியோ, சின்னமோ கூட இல்லை. ஒரு சுயேட்சை இவ்வளவு பெரிய வெற்றி பெற முடியுமென்றால், இந்தியாவை ஆளுகின்ற கட்சி படுதோல்வி அடைவது ஏன்?
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்து வீட்டிலும் பாஜக ஆதரவாளன் இருக்கிறான். அவர்களை ஒன்றிணைக்க வலிமையான தலைவர் தமிழக பாஜகவில் இல்லை..
அத்வானியின் ரத யாத்திரைக்கு பின்பு மிகப்பெரிய போராட்டம் எதையும் தமிழக பாஜக செய்யவில்லை..
இந்து கோவில்கள் சூறையாடப்படுகின்றன, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருந்தும் தமிழிசை என்ன செய்தார்? பேட்டி கொடுத்தால் கட்சி வளருமா?
திமுக, அதிமுக போல் ஊராட்சி, நகராட்சி முதல் ஒவ்வொரு தெருவிலும் கட்சியை வலுப்படுத்துங்கள்.. இளைஞர்கள் தயாராய் இருக்கிறோம். தலைமையை மாற்றி சரியான தலைவரை நியமியுங்கள்..
குறிப்பிட்ட சாதிக்கு பொறுப்புகள் வழங்காமல், அனைத்து சாதியினரையும் முக்கிய பொறுப்புகளில் நியமியுங்கள்.. எதுவுமே செய்யவில்லை என்றால் பாஜகவிற்கு பாஜக தொண்டனே ஓட்டு போட மாட்டான்..
No comments:
Post a Comment