Sunday, December 31, 2017

அமித் ஷா சமரசத்தால் திருப்பம் நிதின் படேல் திடீர் மனமாற்றம்.


ஆமதாபாத்:குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில், நிதித்துறை ஒதுக்காததால், அதிருப்தியில் பதவி ஏற்றுக்கொள்வதை தாமதப்படுத்திய, துணை முதல்வர், நிதின் படேலை, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா நேற்று சமாதானப்படுத்தினார். 
அமித் ஷா, சமரசத்தால்,திருப்பம்,நிதின் படேல்,திடீர்,மனமாற்றம்

இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை, நிதின் படேல், நேற்று ஏற்றுக் கொண்டார்.குஜராத்தில், சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, விஜய் ரூபானி, மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக, மீண்டும்  பொறுப்பேற்ற, நிதின் படேலுக்கு, கடந்த முறை ஒதுக்கப்பட்ட நிதித்துறை, நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கபடவில்லை.


இதனால், கடும் அதிருப்தி அடைந்த நிதின் படேல், தனக்கு ஒதுக்கப்பட்டஇலாகாக்களை ஏற்றுக் கொள்ளாததோடு, மூன்று நாளில் தீர்வு காணப் படாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, குஜராத் துணை முதல்வர், நிதின் படேலுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். விரைவில், நிதின் படேலின் தகுதிக்கு ஏற்ப, துறைகள் வழங்கப்படும் என, அமித் ஷா உறுதியளித்தார். 


இதையடுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக் களை, நிதின் படேல் நேற்று ஏற்றுக் கொள்ள சம்மதம்தெரிவித்தார்.இதுகுறித்து, நிதின் படேல் கூறியதாவது:அமித் ஷா, என்னுடன் தொலைபேசி யில் பேசினார். விரைவில், என் தகுதிக்கு ஏற்ற துறைகள் ஒதுக்கப்படும் என்றும், அதுவரை, தற்போது ஒதுக்கப்பட்ட இலாகாக்களை வகிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, எனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்னை, இலாகாக்கள் தொடர்பானது அல்ல; மாறாக, சுயமரியாதை தொடர்பானது.இவ்வாறு அவர் கூறினார்.


இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை, நிதின் படேல் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, நேற்று இரவு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, நிதின் படேலுக்கு, கூடுதலாக நிதித்துறையும் ஒதுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...