நமது ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரத்துடன் சம்பந்தமான பல தகவல்களை ரிஷிகள் வகுத்து தந்துள்ளனர். அதில் யாகம், ஹோமம், ப்ரீத்தி, பரிகாரம் முதலியன அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும். ஆனால் நாம் இந்த 4 முறைகளையும் பரிகாரம் என்ற சொல்லிலேயே கூறிவிடுகிறோம். இது மிகவும் தவறானது... பழமையான சாஸ்திரத்திரங்களை எமது கண்ணிற்கு நிகராக மதித்து பேண வேண்டும். அவற்றை சரியாக பேண வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் மட்டுமல்ல சகல சாஸ்திரத்திங்களிலும் கூறப்பட்ட சொற்தொடர்களை நாம் (Terminology போல) சரியான வழியில் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தவேண்டியுள்ளது... அந்தவகையில் இன்று சில தகவல்களை பார்ப்போம்... தொழில்முறை ஜோதிடர்கள், இதுவரை அறியாதவர்கள், தவறாக பயன்படுத்துவோர் இப்பதிவை சற்று கூர்மையாக கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
யாகம் - விரும்பிய பலனை அடைய செய்யப்படுவது யாகம் எனப்படும். உதாரணமாக புத்திரகாமேஷ்டி யாகம், அஸ்வமேத யாகம் போன்றவற்றை குறிப்பிடலாம். இது மிகவும் பவித்திரமாக செய்யபடவேண்டியதாகும்.
ஹோமம் - குறித்த ஒரு பிரச்சனையை தீர்க்க செய்யப்படுவது ஹோமம். உதாரணமாக நோய் நீங்க தன்வந்திரி ஹோமம், நீண்ட ஆயுள் பெற மகாமிருத்துன்ஜெய ஹோமம் (ஆயுஷ்ஹோமம்), திருஷ்டி, எதிரிகள் தொல்லை ஒழிய ஸ்ரீ சுதர்சன ஹோமம். ஹோமத்தின் மிக எளிய மற்றும் இலகுவான அனைவரும் தாமாகவே வீட்டில் செய்யக்கூடிய ஒரு வடிவமே அக்னிஹோத்ரமாகும்.
ப்ரீத்தி - கிரகங்களின் தீயபலனை குறைக்க செய்யப்படும் விசேஷ வழிபாடுகள் ஆகும். உதாரணமாக சனிபகவான் கோசாரத்தில் எட்டில் வரும்போது அவரிற்கு ப்ரீத்தி செய்து கொள்ள வேண்டும். இது தசாபுக்தி நாதனுக்கும் பொருந்தும்.
பரிகாரம் - கிரகங்களின் நல்அனுக்கிரகத்தினை பெற்றுக்கொடுக்கும் முகமாக செய்யப்படும் விசேஷ வழிபாடுகள் ஆகும். அதாவது தருவதற்கு தயாராக இருந்தும் அதில் தடை, தாமதம் போன்றவற்றை நிவர்த்திக்க. இதற்கான உதாரணம் - நவரத்தினக்கல்.
பூஜை, அபிசேகம், மந்திரஜெபம், திருக்கோவிலில் விளக்கேற்றுதல், சரியைப்பணி, தானதர்மம் முதலியன சாதாரண பரிகார வழிபாடுகள் ஆகும். யாகம், ஹோமம் முதலியன மிகப்பெரிய விஷயங்கள் ஆகும். நாம் செய்யும் பெரும்பாலான ஹோமங்கள் ப்ரீத்திகளாக இருக்கும். ஜனனகால ஜாதகத்தினை வைத்து கிரகதாக்கங்களிற்கு ஏற்றால்போல ஜாதகரிற்கு எதனை செய்ய வேண்டும் என்று முதலில் அறிய வேண்டும். அது எந்த அளவில் செய்தால் பலன் அளிக்கும் என அடுத்ததாக கணித்து வந்த ஜாதகரிற்கு வழிகாட்டவேண்டியது ஜோதிடர்களாகிய எமது கடமையாகும். இதன்போது ஜாதகருடைய கிரக அமைப்புகள் பரிகாரத்திற்கு வழிவிடுமா என 9ம் ஸ்தானத்தை வைத்து கணிப்பது மிகவும் அவசியம். 9 மற்றும் குரு கெட்டுவிட்டால் அவ்வளவு சீக்கிரம் ஜாதகரிற்கு தெய்வீக வழிபாடுகள் பலிக்காது. இதுபோன்றவர்கள் தமது குலதெய்வத்தினை போற்றி அவர்கள் முறைப்படி பூஜை செய்து வணங்கிவருதல் வேண்டும்.
இறைவனிற்கு நாம் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமலும் பூஜை, அபிசேக வழிபாடுகள் செய்கிறோம் அதே நேரத்தில் சிலவேளைகளில் பலனை எதிர்பார்த்தும் பூஜை, அபிசேகம் செய்கிறோம். இதில் இரண்டாவது பற்றி பார்ப்போம்...
நாம் பலனை எதிர்பார்த்து செய்யும் பூஜை, அபிசேகம் நமக்கான பலனை கொடுக்க 90 - 120 நாட்கள் தேவை. சின்ன பிரச்சனை என்றால் ஒருமுறை செய்தால் போதும். கர்மா அதிகம் என்றால் வருடத்திற்கு ஒருமுறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பலரிற்கு பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்றே தெரிவதில்லை. கிரகநிலை சரியில்லாத காரணத்தால் அவை நம் முளையை சரியாக செயற்பட விடாது. இவர்களிற்கெல்லாம் ப்ரீத்தி செய்தபின்னரே ஒரு தெளிவு பிறக்கும் என்பது கண்கூடான உண்மை.
யாகம், ஹோமம் என்பது மிகப்பெரிய விஷயங்கள். சாதாரணமான வழிபாடுகள் பலிக்காவிட்டால் மட்டும் இவற்றை செய்ய வேண்டும். இதற்கான அதிக செலவும் ஒரு காரணம். சரியான காலநேரத்தில் சரியான முறையில் இவற்றை செய்யும்போது மிகப்பெரிய அளவில் இறைஆற்றல் சக்தி நமக்கு கிடைத்து தேவாதிதேவர்களினதும் இறைவனினதும் அருள் கிடைத்து இந்த பிரபஞ்சத்திலிருந்து எமக்கான பலன் தருவிக்கப்படுகிறது என்பது சத்தியம்...
நன்றி.
நன்றி.
No comments:
Post a Comment