2004ல் கலைஞர் ஆசியில் நடந்த சோனியா காங்கிரஸ் அரசின் அனைத்து மட்டத்திலும் ஆசி பெற்று நடத்தப்பட்ட ஒரு கூட்டுக் கொள்ளை.
குடும்ப சண்டையில் தயானிதி தூக்கி எறியப்பட்டு ராசா பதவி ஏற்றவுடன் அவர் தலைமையில் பக்காவாக திட்டப்பட்டு நடத்தப்பட்ட மோசடி இது.
மறுமுறை 2009 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் டெல்லியில் கலைஞர் தவமாய்தவமிருந்து அதே தொலைதொடர்பு துறையை ராசாவுக்கே வாங்கி கொடுத்து பூசி மொழுக நினைத்த மோசடி இது.
அதிகார போட்டியின் காரணமாக குடும்பத்திற்குள் குழாயடி சண்டையாகி சன் டிவியால் வெகுஜன மக்களிடம் பரப்பப்பட்ட மோசடி இது.
காங்கிரஸ், திமுக தவிர மற்ற அனைத்து தேசிய, மானில கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்த்த அகில உலக புகழ் பெற்ற ஒரு மெகா மோசடி இந்த சோ கால்டு 2G ஸ்பெக்ட்ரம் மோசடி.
அரசிற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டது உண்மை.
பல அரசியல்வாதிகள் பல நூறு கோடிகள் லாபமடைந்தது உண்மை.
கொள்ளையர்கள் யார் என்று ஊருக்கே தெரியும்
ஆனால் இன்று சட்டத்திற்கு தேவையான சான்றுகள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திருக்கின்றது சிறப்பு நீதிமன்றம்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது தான் மிச்சம் என்றும், நன்றாக சுறுசுறுப்புடன் ஆரம்பித்த வழக்கை போக போக நீர்த்துப்போக செய்தது CBI என்றும், மாண்புமிகு நீதிபதி அவர்களே வருத்தப்பட்டிருக்கிறார்.
இதை வைத்துக்கொண்டு மோடியை குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறது ஒரு கூட்டம். தீர்ப்பு எப்படி வந்திருந்தாலும் இவர்கள் மோடியை திட்டியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
உண்மையில் நடந்தது என்ன?
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2011ல் காங்கிரஸின் CBI. அதுவும் எதிர்கட்சிகளின் பலவிதமான போராட்டங்களுக்குப் பின்னர்.
தரவுகளை சமர்பிக்க எத்தனை காலம் தாழ்த்த முடியுமோ அத்தனையையும் செய்தது காங்கிரஸின் CBI. ஆதாரங்கள் அழிக்கப்படவே இந்த காலத்தாமதம் என்று அன்றே துக்ளக் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார் திரு சோ அவர்கள்.
குற்றம் செய்தவர்கள் பதுக்க வேண்டியதை பதுக்கிய பின் அழிக்க வேண்டியதை/வேண்டியவர்களை (சாதிக் பாஷா) அழித்தப்பின் பிறகு ஒரு வழியாக அரைகுறை மனதுடன் ஏதோ வழக்கை நகர்த்தியது காங்கிரஸின் CBI.
பின்னர் 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து மேலும் சில தரவுகளை கொடுத்ததாகவும் அதை நீதிமன்றம் கால தாமதமாக வந்ததாக கூறி நிராகத்ததாக கூறுகிறார்கள் ஒரு சிலர்.இது உண்மையெனில் அந்த தருணத்தில் மோடி அரசு உஷாராகி இருக்க வேண்டும்.திட்டமிட்டு நீதயின் வாயை தற்காலிகமாக பொத்தியிருக்கிறார்கள்.
மோடியின் கூட இருந்தே சில கறுப்பு ஆடுகள் காங்கிரஸிற்கு சாதகமாக சில விஷயஙளை செய்திருக்கின்றது என்பது புரிகின்றது. காங்கிரஸ் ஆதரவு நபர்களை தூக்கி எறிந்துயிருக்க வேண்டும். மக்கள் மன்றத்திற்கு இதை கொண்டு சென்றிருக்க வேண்டும்.
நன்று. என்னை பொருத்தவரை மோடி மீது நான் வைத்த நம்பிக்கை சற்றும் குறையவில்லை.
மோடியின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
சு.சுவாமியின் கருத்தை மோடி கேட்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாய் தான் நான் நினைக்கின்றேன். செவிசாய்ப்பார் என்றும் நம்புகின்றேன்.
இதோ CBIயின் அடுத்தக்கட்ட மூவ்..
பொருத்திருந்து பார்ப்போம்.
சசியையும் தண்டிக்கவே 20 ஆண்டுகள் ஆகவில்லையா ..இவ்வழக்கிலும் நீதி வெல்லும் என்று நம்புவோம்..மோடியையும் சுவாமியையும் நம்புவோம்.
நாட்டின் வளத்தை கொள்ளையடித்த கயவர்களை தண்டிப்பதில் ஒரு வேளை மோடி தோற்றுப் போனாலும் இறைவன் தண்டிப்பான் என்று நம்புவோம்..
அரசன் அன்றே தண்டிக்க தவறினால் தெய்வம் நின்று நிதானமாக தண்டித்தே தீரும்..
ஜெய் ஹிந்த்!!!!!!
No comments:
Post a Comment