Thursday, December 21, 2017

தினமும் காலையில் #யானையை #பார்ப்பவர்

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் சந்நிதியை காலையில் திறக்கும் போது, சந்நிதி முன், ஒரு பசுவும், யானையும் எதிரெதிரே நிறுத்தப்ப்படும். சந்நிதியில் இருக்கும் ஐந்து பாத்திரங்களில் கொள்ளிடம் தீர்த்தம் நிரப்பப்படும். வீணை இசைத்தபடி, திருப்பள்ளியெழுச்சி பாடி, ரங்கநாதரை துயில் எழுப்புவர். உடனே திரைச்சீலை அகற்றப்படும். பெருமாள் தன் முன் நிற்கும் லட்சுமியின் அம்சமான பசு,யானையைப் பார்த்து, அன்றைய நாளைத் தொடங்குவதாக ஐதீகம். பின்னர், ஒருவர், திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் போன்ற பஞ்சாங்க செய்தியை வாசிப்பார். பட்டாச்சாரியார் சுவாமிக்கு தந்தசுத்தி, கரசுத்தி, பாதசுத்தி ஆகியவற்றைச் செய்து பூஜை செய்வார். பின், சுவாமிக்கு கண்ணாடி காட்டப்படும். வெந்நீரில் அபிஷேகம் செய்த பின், குங்குமம், சந்தனக்குழம்பு இடப்பட்டு ஆடை, கஸ்தூரிநாமம், ஆபரணம், பூமாலை அணிவிக்கப்படும். "கோயில் ஒழுகு' என்ற நூலில் கூறப்பட்ட விதிமுறையே, ஸ்ரீரங்கம் கோயிலில் பின்பற்றப்படுகிறது.No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...