கர்னாடக சங்கீத பாடகர்கள் சிலர் கிருஸ்துவ மத பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு வந்ததும் அதற்கு விளக்கங்கள் கொடுத்தனர், ஒருவர் அப்படித் தான் பாடுவேன் என்ற ரீதியில் பேசியுள்ளார்.
இதற்கெல்லாம் இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்ற கேள்வி முகநூலில் சிலர் கேட்கிறார்கள் ? நமக்கு வெட்கமே இல்லையா என்ற ஆதங்கம் வேறு.
எல்லாம் நாம் கொடுத்த தைரியம் தான் ?
நமக்கு வெட்கம் துளியாவது இருந்திருந்தால் இந்து மத கடவுளை முழு நேரம் வசை பாடிய கருணா 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருப்போமா ?
நமக்கு ரோஷம் இருந்திருந்தால் வைரமுத்து ஆண்டாளை கேவலப்படுத்திவிட்டு வெளியில் தலை நிமிர்ந்து நடப்பாரா !
நமக்கு சூடு சொரனை இருந்திருந்தால் கமல்ஹாசன் நான் ‘கருப்பு சட்டைக்காரன்’ என்று கூறிக்கொண்டு கட்சி ஆரம்பிப்பாரா ? வீரமணி வகையாராவினர் இன்னமும் நம் மதத்தை இழிவு படுத்திக் கொண்டு திரிவதற்கு நம் ‘சகிப்புத்தன்மை’ தானே காரணம்.
இந்து மதம் போதிப்பது சகிப்புத்தன்மை என்று நமக்குத் தானே போதனை செய்கிறார்கள்.
‘சோ’ அவர்கள் கூறியதை நினைவு கூறுவோம், #யாருக்கும்வெட்மில்லை !
No comments:
Post a Comment