காஷ்மீர் பிரச்னைக்காக, டில்லியில் குரல் கொடுக்க உள்ள, தி.மு.க., -எம்.பி.,க்கள், தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு துாணாக விளங்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, தலைவர் நியமிக்க படாததை எதிர்த்தும், குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின், காவிரி நடுவர் மன்றம், தன் இறுதி தீர்ப்பை அளித்தது. பின், காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது.ஆனால் அதற்கு, தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மத்திய அரசு, ஒரு அரசாணையை வெளியிட்டது.அதன்படி, 'மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர், மசூத் உசேன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து, பணிகளை கவனிப்பார்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, 'காவிரி ஆணையத்திற்கு, தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய, முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம்கோர்ட்டில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்து. இந்நிலையில், மசூத் உசேன் கடந்த ஜுனில் ஓய்வு பெற்றுவிட்டார். இவருக்குப் பின், மத்திய நீர்வள ஆணையராக, என்.கே.சின்ஹா நியமிக்கப்பட்டபோது, 'மசூத் உசேன் வகித்த, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவியையும், இவர் வகிப்பார்' என, மத்திய அரசு, உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
நிலைமை இப்படியிருக்க, பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, தமிழக எம்.பி.,க்கள் யாரும் இப்பிரச்னையை கிளப்பவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், இப்போது தலைவர் இல்லாமல் முடங்கி கிடக்கிறது.எனவே, காஷ்மீர் பிரச்னைக்காக, நாளை டில்லியில் கூடவுள்ள, தி.மு.க., எம்.பி.,க்கள், காவிரி ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமிக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:
Post a Comment