Thursday, August 22, 2019

இந்திராணி வாக்குமூலம்: சிதம்பரம் சிக்கியது எப்படி?

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.




இதன்படி, அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், "நானும், தனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தியின் தொழிலுக்கு உதவும் படியும் கேட்டுக் கொண்டார். டில்லி ஹயத் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்" என கூறினார்.




இந்திரா முகர்ஜியின் இந்த வாக்குமூலம் தான் சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்திரா முகர்ஜி மற்றும் கார்த்தியின் திட்டப்படி, கார்த்திக்கு சொந்தமான ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக 700,000 டாலர் (ரூ.3.10 கோடி) மதிப்பிலான 4 இன்வாய்ஸ் தயாரித்துள்ளனர். இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குகள் 46 சதவீதமாக உயர்ந்தது. ரூ.4.62 கோடிக்கு பதிலாக சட்ட விரோதமாக ரூ.305 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளதாகவும் இந்திராணி கூறி இருந்தார்.




இந்திராணியின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, நிதியமைச்சக ஆவணங்கள் மற்றும் இந்திராணியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சிதம்பரம் பதிலளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...