ப சிதம்பரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது எல்லாம் - அவரின் வெளுத்த வேஷ்டி, பளீச் என்ற ஆங்கில உரை, தெளிவான தமிழ். நன்றாகப் படித்தவர். எப்படி அனைவர் முன்னிலையிலும் நடக்க வேண்டும் என்று தெரிந்தவர். காங்கிரஸ் கட்சியில் மிகப் பிரபலமானவர். இந்தி மட்டும் தெரிந்திருந்தால், அவர் என்றோ பிரதம மந்திரியாக இருந்திருப்பார். அவருக்கு, சொல் வளம், திறமை, உழைப்பு அனைத்தும் இருந்தது. இருப்பினும், அவரின் இன்றைய நிலையைப் பார்த்தால், அனைவருமே சிரிக்கும் படியான அவல நிலை. இருபத்தி மூன்று முறைக்கு மேல் முன்ஜாமீன் வாங்கிவிட்டு, இன்று திடீரென்று காணாமல் போகிறார் என்றால் , இதை விட ஒரு கேவலமான நிலை ஒன்றும் இல்லை.
ஒரு சிலர் செய்யும் தவறால், அவர் குடும்பம், சமுதாயம், மாநிலம், தேசம் அனைத்தும் அதிர்ச்சியால் தலைகுனிந்து நிற்கும் நிலை. முதன்முதலில் "ஹிந்து தீவிரவாதம் " என்ற வார்த்தையை உபயோகித்து, இந்து சமுதாயத்திற்கு ஒரு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியவர். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக ஆட்சி செய்த பொழுதும், முகலாயர்கள் நம்மை அழித்த போதும் , கத்திமுனையில் அவர்கள் நம்மை மதம் மாற்றம் செய்த பொழுதும் நாம் வாயை மூடிக் கொண்டு இருந்தோம். வெளிநாட்டில் இருந்து படை எடுத்தவர்கள் அனைவரும் அறிந்த ஒரே உண்மை-இந்துக்கள் என்றும் அமைதியை விரும்பும் மக்கள் , அவர்கள் போரிட மாட்டார்கள் என்று கருதிதான், நாட்டை அழித்தார்கள். நம்மை அழித்தவர்களே , நம்மை அடிமைப் படுத்தியவர்களே நம்மை தீவிரவாதிகள் என்று சொல்லாத போது , சிதம்பரம் நம்மை "ஹிந்து தீவிரவாதி, ஹிந்து தீவிரவாதம் " என்று கூறி, நம்மை களங்கப் படுத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் தற்போது வாழும் இந்துக்களை மட்டும் கூறவில்லை, நமது ரிஷிகளையும், நமது ஆச்சாரியர்களையும், நமது அனைவரின் பரம்பரைகளையும் மறைமுகமாக களங்கப் படுத்தினார். மதுரை மாநகரம் திருட்டுப் பட்டம் தவறாக இட்டதால், ஒரு கற்புக்கரசியினால் எரிக்கப் பட்டதை மறந்து விட்டார் போல் தெரிகிறது. சிதம்பரம் அவர்கள் , அந்த மாநகரின் அருகாமையில் இருந்து வந்தவர் என்று அனைவருக்கும், தமிழ் பேசும் மக்களுக்குத் தெரியும்.
இவரின் இந்த ஓட்டம், நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். மாண்புமிகு காமாராஜர் அவர்கள் இறந்த போது அவர் வங்கியில் ஆயிரம் ரூபாய் கூட இருந்ததில்லை. மகாகவி பாரதி இறந்த போது அவரின் குடும்பத்தை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. இவர்கள் எல்லாம், பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப் பட்டு இருந்தால், நாம் , தமிழ்நாடு மாநிலத்தில், சுதந்திரமாக பிரிவினை வாதம் பேச மாட்டோம். இந்த மாதிரியான அவல நிலையைப் பார்த்து நாம் தலை குனிந்து இருக்க வேண்டும். இம்மாதிரி தமிழ்நாடு மாநிலம் மாறும் என்று நினைத்திருந்தால், அவர்கள் அன்றே மடிந்து இருப்பார்கள்.
அருமையான குடும்பம், பிரபலமான முன்னோர்கள், நல்ல படிப்பு, நன்றாக வளர்ப்பு, முன்னோடியான சமுகம், நல்ல வசதி, பொறுப்பானா மந்திரிப் பதவி, நல்ல பெயர். இவை அனைத்தும் இருந்தும் ஒருவர் ஓட வேண்டிய நிலை. அவலமான நிலை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கும்.
முதல் காரணம் ஆசை, பேராசை. இரண்டாவது காரணம் மகன் மேல் இருந்த மோகம். நல்ல பெயர் இருந்தும், நல்ல புகழ் இருந்தும் சிதம்பரம் நட்பு. கூடாத உறவுகள். காங்கிரஸ் கட்சியில் கூடாத நட்பு. துரியோதனன் சொன்னது போல்-தர்மம் என்ன என்று தெரியும். ஆனால் என்னால் தர்மத்தை நடைமுறையில் கொண்டு வரமுடிய வில்லை.
காமாராஜர் போன்றவருடன் தொடர்பு இருந்தாலும், அவரின் எளிமையை தனது வாழ்வில் கொண்டுவராத ஒரு நிலை. பணமும், பதவியும் தலைக்கு மேல் சென்றால், நாம் ஓட வேண்டிய நிலைதான் வரும். இதை விதி என்று சொல்வதா, இல்லை நாமே நம் தலையில் மண்ணை போட்டுக் கொள்கிறோமா? காங்கிரஸ் கட்சியில் வேண்டாத சிலருடன் தொடர்பு ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். ஒரு உயர்ந்த, தலை நிமிர்ந்த மனிதன் கருணாநிதி, ஸ்டாலின், திருமாவளவன், வீரமணி போன்ற மனிதர்களுடன் சேர்ந்தால் , ஓட வேண்டிய நிலைதான் இருக்கும்.
இரண்டாவதாக, சிதம்பரம் அவர்கள் ஒரு திருதராஷ்ட்ரன் போல் நம் கண்ணுக்கு தெரிகின்றது. மகாபாரதம் இன்றும் உண்மையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் கார்த்திக் மீது புகார் வரும் சமயம், ஒரு திருதராஷ்ட்ரன் போல் செயல் பட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாசம் கண்ணை மறைத்ததா இல்லை பதவி கண்ணை மூடியதா, இல்லை புகழ் என்று எதையோ நினைத்து தவறுகள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைக்கத் தோன்றியதா. அவர்களின் நட்பு வட்டாரம் நமக்கு தெரிகிறது.
லஞ்சத்தில் ஊறிய காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பு, கபில் சிபல் போன்றோருடன் நட்பு, அரசியலுக்காக கறைபடிந்த கருணாநிதியுடன் கூட்டு, IMX விவகாரம் போன்ற செய்யக்கூடாத லஞ்சம், அனைத்தும் மகனுக்காக . வெள்ளைவெளு இருந்த வேஷ்டியின் கரையை இனி யாராலும் அழித்து விடமுடியாது. மகன் மேல் ஆசையும், பணத்தின் மேல் மோகமும், கூடாத நட்பும், பதவி மேல் தீராத வேட்கையும் ஒரு மனிதனை ஓட வைத்துள்ளது. இந்த மனிதனின் ஓட்டம் , தமிழ்நாடு மாநிலத்தில் பல புள்ளிகளை தொடாமல் நிற்காது.
No comments:
Post a Comment