Monday, August 19, 2019

அத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்?

அத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்?
அத்திவரதர்


















ஒரு தடவை வசிஷ்டர் முனிவர் வேள்விச் சடங்குகளைச் செய்து அக்கினியில் ஓமம் செய்தபோது புண்ணிய கோடி விமானத்தில் வரதர் தோன்றி அருள்பாலித்தார். இப்படி தீயிலிருந்து தோன்றியதால் வரதர் தம் உடல், ஒரு சமயம் தகிக்கிறது. தினம் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடத்து நீரால் அபிஷேகிக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்போதும் குளத்து நீரில் கிடத்தி எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று பக்தர்களிடம் பணிக்கிறார் பெருமாள். அதையட்டி புனிதம் பொருந்திய ‘அனந்தசரஸ்’ புஷ்கரணியில் எழுந்தருளுவிக்கப் பெறுகிறார்.

‘இனி மூலவருக்கு என்ன செய்வது?’ அர்ச்சகர்கள் ஏங்குகிறார்கள்.

பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய வரதர், ‘பழைய சீவரம் மலையில் கல் எடுத்து தன்னைப் போலவே தனது மறுபதிப்பாக சிலை செய்து பெருமாளை இங்கே பிரதிஷ்டை செய்து வாருங்கள். நாம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எழுந்தருளி சேவை சாதிப்போம் என்று பணிக்கிறார்.

அவ்வாறே காஞ்சீபுரத்தின் கிழக்கே 10 மைல் தூரத்தில் பழைய சீவரம் மலையில் கல் எடுத்து சிலை செய்து வரதர் சந்நிதியில் மூலப் பெருமாளாக அவரை பிரதிஷ்டை செய்து திருவாராதனை நடத்தி வருகிறார்கள். மேற்கண்டவை புராண மற்றும் செவிவழி வாயிலாகக் கூறப்படுகின்றன.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் தை மாதம் 2-ம் நாள் வரதர் காஞ்சியிலிருந்து பழைய சீவரம் பார் வேட்டை உற்சவமாக சென்று வருகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...