அதிமுகவினை விமர்சிக்காமல் திமுகவினை ஏன் விமர்சிக்கின்றாய் என்றால் வேறோன்றுமில்லை
தமிழக அரசியலில் எல்லாமே ஊழலில் திளைத்தவை, இரண்டும் ஒன்றுகொன்று குறைந்தவை அல்ல
ஆனால் தேசத்தின் முக்கிய சிக்கலுக்கு அதிமுக என்றுமே தேசத்தின் பக்கம் நிற்கும், திமுக அப்படி அல்ல
அன்று பிரபாகரனை வீட்டுகாவலில் வை என்றவுடன் ராமசந்திரன் உடனே செய்தார், ஆனால் அவரை விடுவி என ஒப்பாரி வைத்தது திமுக திக
டெல்லிக்கும் பிரபாகரனுக்கும் முறுக்கிகொண்ட பொழுது மவுனமாக இந்தியா பக்கம் வந்தது அதிமுக
அமைதிபடை செல்லும் பொழுது எதிர்த்தது திமுக அதை ஏற்றுகொண்டது அதிமுக
அமைதிபடை திரும்ப வரகூடாது என சொன்னார் ஜெயா, அது இந்தியாவின் கவுரவம் என அடித்து சொன்னார் ஆனால் அமைதிபடையினை திரும்ப பெற சொன்ன கட்சி திமுக அதை வரவேற்காதமுதல்வர் கலைஞர்
அது தேச அவமானம்
பின்பு புலிகளின் கொலைபட்டியலில் இடம்பெற்றார் ஜெயா, வைகோவினை களையெடுக்க புலிகளோடுசதி என சும்மா கதை விட்டார் கலைஞர்
அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை மன்மோகன் அரசு செய்தபொழுது அதாவது இனி நாம் அணுசோதனைச் செய்ய கூடாது என கைகள் கட்டபட்ட பொழுது முதலில் கண்டித்தவர் ஜெயா, திமுக வழக்கம் போல அமைதி
பிரபாகரனை அழைத்து வந்து தூக்க்கிலடவேண்டும் என முழங்கி தீர்மானவிட்டவர் ஜெயா
ஆனால் தமிழ்செல்வனுக்கு கவிதை எழுதி பிரபாகரனுக்காக உண்ணாவிரதம் இருந்தவர் கலைஞர்
இப்பொழுதும் பாருங்கள்
மோடி அகில உலக ராணுவ கண்காட்சியினை வரவேற்க வந்தபொழுது கருப்புகொடி காட்டி விரட்டி அடித்து தேசிய அவமானத்தை கொடுத்த கட்சி திமுக
அதிமுக அப்படி அல்ல
காஷ்மீர் விவகாரத்தை தேச நலனுக்காக அதிமுக வரவேற்கின்றது, திமுக இதோ டெல்லியில் தற்கொலை செய்ய கிளம்பிவிட்டது
கூட்டி கழித்து பாருங்கள், இரண்டுமே ஊழல் அழிச்சாட்டிய சுரண்டல் கட்சிதான்
ஆனால் தேசம் என்றால் அதிமுக ஓடிவரும் , திமுக என்பது தனக்கு மந்திரிசபை இல்லா டெல்லி என்றால் தேச துரோகம் செய்ய தயங்காது
அதிமுக இந்துக்களை சீண்டாது , திமுக வாய்ப்பு கிடைத்தால் அவர்களை புண்படுத்த தயங்காது
இங்கு திமுகவினை விட அதிமுக அதிகமுறை ஆளவும் வெற்றிபெறவும் அதன் தேசாபிமானமும் இந்துமத அபிமானமுமே மகா முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று திமுக இம்சைகள் உட்பட
இந்த திமுகவின் பச்சோந்திதனத்தையும் தேசவிரோதத்தையும் இந்து வெறுப்பையும் கண்டிக்கிறோமே அன்றி வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment