இன்றைய தினத்தந்தி நாளிதழை படிப்தற்காக வாங்கினேன். அதில் வருகிற விளம்பரங்கள் எண்ணிக்கை சுமார் 85க்கும் அதிகமானவைகள். சின்ன சின்ன விளம்பரங்கள் பெரிய விளம்பரங்கள் என விளம்பரங்கள் இருந்தன. இந்த விளம்பரங்களுக்கும் கொடுக்கப்படும் தொகையினை நான் அறியேன். இந்த விளம்பரங்களுக்கான தொகை நிச்சயமாக நமது தலையில் தான் ஈடுகட்டுவார்கள். இதில் 16 விளம்பரங்கள் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்டவைகள். அதில் பள்ளி/கல்லூரிகளின் தரம், ஆசிரியர்களின் தரம் இவற்றை குறித்ததான விளம்பரங்கள். இதில் மற்றொரு விசயம் என்னவெனில் இந்த பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாமேதைகளாக உருவாகுகின்றனர் என அச்சடிக்கப்பட்டும் இருந்தது. எனக்குள் எழுகின்ற சில கேள்விகள். இதோ உங்கள் பார்வைக்காக...
1. தனியார் பள்ளியில் படித்து சாதனை படைத்த மாணவர்கள் எத்தனை பேர்?
2. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றதா?
3. தனியார் பள்ளியில் படிக்க செலவழித்த பணத்தை திரும்ப எந்த வழிகளில் சம்பாதிப்பார்கள்?
4. தனியார் பள்ளியில் படித்து வேலைக்கு எத்தனை பேர் சமுக சிந்தனையுடன் உள்ளனர்?
5. தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்த மானவர்களில் எத்தனை பேர் ஏழைகளுக்காக சேவை செய்கின்றனர்?
6. தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் அனைவரும் உள்நாட்டில் தான் வேலை பார்க்கின்றனரா?
இந்த கேள்விகளுக்கு பதில் தேடினால் கிடைப்பதில்லை... அங்கும் படிப்பவர்களில் சிலருக்கு தான் வேலை கிடைக்கின்றன., மேலும் அங்கு படித்து வெற்றி பெற்று உயர்ந்தவர்களை விட பள்ளி கல்லூரிகளில் கொடுக்கப்படும் டார்ச்சர்களால் தற்கொலை செய்துக்கொண்டவர்களே அதிகம்.
கல்வி வியாபார பொருளாக மாறிவிட்ட இந்த காலத்தில் ஊழலை ஓழிக்க முயற்சித்தால் அதற்கு முன்னோடியாக கல்வியை முற்றிலும் இலவசமாக மாற்றனும். கல்விகளில் வேறுபாடு இருக்க கூடாது. இந்த நிலமை மாறனும்னா முதல்ல அரசு பள்ளிகள் தரம் உயர்த்தனும். பல பள்ளிகளில் கட்டங்கள் சரியில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. கல்விற்காக ஒதுக்கப்படுகிற நிதிகள் அரசு பள்ளிகளுக்காக செலவிடப்படனும். என் தமிழகத்தில் மாற்றத்தை விரும்புகிறேன். மாற்றம் வருமா? காலங்கள் பதில் சொல்லும்...
இதனை வேதனையுடன் உங்களிடம் பகிருவது உங்கள் சகோ.....
இதனை வேதனையுடன் உங்களிடம் பகிருவது உங்கள் சகோ.....
No comments:
Post a Comment