சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (48). இவர், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தார். கடந்த 11-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீதேவி இறந்தார். அவரின் இறுதி அஞ்சலி ராயபுரத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி இறந்த தகவல், அவருடன் பணியாற்றிவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த 12-ம் தேதி ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி பங்கேற்றார். அவருடன் வண்ணாரப்பேட்டை காவல் சரக போலீஸாரும் கலந்து கொண்டனர். காசிமேடு மயானத்துக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது துணை கமிஷனர் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரமணி, இந்திராணி, ஏட்டு வரலட்சுமி மற்றும் பெண் போலீஸார் அனைவரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடலை தோளில் சுமந்தபடி காசிமேடு மயானத்துக்கு கொண்டு சென்றனர். துணை கமிஷனர் சுப்புலட்சுமியின் இந்தச் செயல் காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.இதுகுறித்து துணை கமிஷனர் சுப்புலட்சுமி அவர்கள் தெரிவித்ததாவது ``இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்தும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்றேன். தகன மையத்துக்கு ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கியபோது நானும் சுமந்து சென்றேன்" என்றவரிடம் உயரதிகாரியாக இருக்கும் நீங்கள் இன்ஸ்பெக்டரின் சடலத்தைத் தூக்கியது சக காவலர்கள் மத்தியில் உங்கள் மீதான மரியாதையை உயர்த்தியுள்ளதே? என்று கேட்டதற்கு, ``அந்த நேரத்தில் அப்படி தோணியதால் ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கிச் சென்றேன்" என்றார். நல்ல விஷயங்களை பாராட்டுவோம். Rip

No comments:
Post a Comment