மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், 13 சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த, 16 பேர் என, 39 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு, முக்கிய பங்காற்ற உள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்ததால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அதிரடியாக, பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்.,கின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.இந்தப் பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

மொத்தம் உள்ள, 288 இடங்களில் பெரும்பான்மைக்கு, 145 பேரின் ஆதரவு தேவை. பா.ஜ., 105 இடங்களில் வென்றது. அஜித் பவாருக்கு அவருடைய கட்சியில் எத்தனை பேரின் ஆதரவு உள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.இந்த சூழ்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டால், 13 சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த, 16 பேரின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது.மொத்தம், 56 இடங்களில் வென்ற சிவசேனா, தங்களுக்கு, ஏழு பேரின் ஆதரவு உள்ளதாக கூறி உள்ளது.
அதே நேரத்தில், பா.ஜ., தங்களுக்கு, 14 பேரின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளது. பிரகார் ஜனசக்தி கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பச்சு கட்டு, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்தக் கட்சிக்கு, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கிராந்திகாரி ஷேத்காரி பக் ஷ் கட்சியின் எம்.எல்.ஏ., சங்கர்ராவ் கடக், சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தார். நான்கு சுயேச்சைகளும் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.,வுக்கு எட்டு சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பி.டபிள்யூ.பி., எனப்படும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, ராஷ்ட்ரீய சமாஜ் பக் ஷ், ஜன் சூரஜ்ய சக்தி கட்சி ஆகியவற்றின் தலா ஒரு எம்.எல்.ஏ., மற்றும் பகுஜன் விகாஸ் அகாடியின் மூன்று பேர் ஆதரவு உள்ளதாகவும் பா.ஜ., கூறியுள்ளது.இவர்களைத் தவிர, ஏ.ஐ.எம்.ஐ.எம்., மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேவா, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, சுவாபிமான் பக் ஷ் ஆகியவற்றுக்கு, தலா ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். இவர்கள் ஆதரவு யாருக்கு என்பது இதுவரை முடிவாகவில்லை.
No comments:
Post a Comment