*சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.*
*ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.*
*அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார்.*
*நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,*
*ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.*
*நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.*
*அவர்கள் சொன்னார்கள்.*
*“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர்.*
*நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.*
*எது சொர்க்கம்?*
*இந்தக் கதை என்ன சொல்கிறது?*
*எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பபடமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.*
No comments:
Post a Comment