தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும், அவரது அரசியல் திட்டமிடல் குழு ஆலோசகராக செயல்பட்டு வந்த சுனில், திடீரென விலகியுள்ளார். அந்த இடத்திற்கு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வருவாரா என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றியவர், சுனில். இவர், 2016 சட்டசபை தேர்தலில், ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் அரசியல் திட்டமிடல் குழு ஆலோசகராக பொறுப்பேற்றார்.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றியவர், சுனில். இவர், 2016 சட்டசபை தேர்தலில், ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் அரசியல் திட்டமிடல் குழு ஆலோசகராக பொறுப்பேற்றார்.
முக்கிய பங்கு
'நமக்கு நாமே' திட்டத்தை, சுனில் தலைமையிலான, 'ஓ.எம்.ஜி., குரூப்' தான் செயல்படுத்தியது. இந்த குரூப்பில், தற்போது, ஸ்டாலினிடம் உதவியாளராக பணியாற்றும் தினேஷ் உட்பட, 10க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினர். கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது.
ஆனால், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் நடத்திய, 'நமக்கு நாமே' திட்டத்தினால், தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கும், ஓ.எம்.ஜி., பணிகள் முக்கிய பங்கு வகித்தன.
ஆனால், தி.மு.க.,வின் ரகசிய விவகாரங்கள் மற்றும் அரசியல் திட்டமிடல்கள், ஆளுங்கட்சி மேலிடத்திற்கு தெரிய வருவதால், ஓ.எம்.ஜி., குரூப் மீது சந்தேகம், ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு எழுந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், ஓ.எம்.ஜி., குரூப்பில் பணியாற்றிய சிலர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சுனில் வாயிலாக, டில்லி அரசியல் தொடர்புகள் அனைத்தும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதால், சுனிலின் பணிகள் இனி தேவையில்லை என, தி.மு.க., மேலிடம் கருதியது.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைவதற்கு, சுனில் வகுத்து கொடுத்த பிரசார வியூகமும், வன்னியருக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பும், முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எதிர்ப்புமேலும், ராஜ்யசபா எம்.பி., பதவியை, சுனில் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்கும்போது, எதற்கு, எம்.பி., பதவி என, ஸ்டாலினிடம், தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், சுனில் அதிருப்தி அடைந்தார்.
அதேபோல், உதயநிதியை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக, ஸ்டாலினுக்கும், சுனிலுக்கும் கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக, சுனில் விலகி உள்ளார். எனவே, அந்த வெற்றிடத்தை, பிரசாந்த் கிஷோர் நிரப்புவாரா அல்லது சபரீசனே கவனித்து கொள்வாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் பற்றிரஜினியிடம், 'பற்ற' வைத்த கமல்
மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், சிவசேனா கட்சிக்கு ஆதரவாக, பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அங்கு தேர்தல் பணிகள் முடிந்து விட்டதால், அடுத்ததாக, தமிழக சட்டசபை தேர்தலில் பணியாற்ற, அவர் தயாராகி உள்ளார். முதல்வர் இ.பி.எஸ்., நடிகர் ரஜினி ஆகியோர் தரப்பில், பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தப்பட்டது. இது தெரிந்ததும், ரஜினியை கமல் உஷார் படுத்தி உள்ளார்.
கமலிடம் ஏற்கனவே சில மாதம், கிஷோர் பணியாற்றியிருந்தார்.'பிரசாந்த் கிஷோர், பா.ஜ., எதிர்ப்பு நிலைக்கு முக்கியத்துவம் தருகிறாரே தவிர, மக்கள் நீதி மையம் கட்சியை முன்னிலைப்படுத்த, எந்த பணிகளும் செய்யவில்லை. எனவே, அவரை நீங்கள் பணியமர்த்த வேண்டாம்' என, ரஜினியிடம் கமல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, தேர்தல் வியூக பணிகள் மேற்கொள்ள, பிரசாந்த் கிஷோர் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஒரு பேச்சு அடிப்படுகிறது.
No comments:
Post a Comment