கனிமொழி, தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தனது கணவரின் வருமானத்தை சரியாக குறிப்பிடவில்லை. எனவே அவரது வெற்றியை செல்லாதாததாக அறிவிக்கவேண்டும் என்று தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் .
இதனை எதிர்த்து கனிமொழி அந்த மனுவினை விசாரிக்கக்கூடாது தள்ளுபடி செய்யவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாண்புமிகு நீதிபதி சுப்பிரமணியன் அவர்கள் கனிமொழி மனுவினை தள்ளுபடி செய்து மேற்படி சந்தானகுமார் மனுவின் மீதான விசாரணையை தொடரலாம் என்று ஆணையிட்டார்.
அண்ணே.. என்னண்ணே இப்பிடி ஆயிருச்சு ஒருவேளை எனக்கு எதிரா தீர்ப்பு வந்துருமோ ?
தங்கச்சி ..இதுக்கே பயந்தா எப்படி இன்னும் 2G ங்குற மேல்முறையீடு வழக்கு வேற இருக்கு .அந்த தீர்ப்பை பத்தி மொதல்ல கவலைப்படு.. பயப்படு.. அதுல ஏதாவது பாதகமா வந்துருச்சுன்னா நீ திகாருக்கு திரும்ப வேண்டி இருக்கும் .அங்கே ஏற்கனவே சிதம்பரம் படுற அவஸ்தையை பாத்தா எனக்கு அடிவயிறு கலங்குது .
அண்ணே ..என்னண்ணே ..இப்பிடி பயமுறுத்துற
பயமுறுத்தலை தங்கச்சி நமக்கு இப்போ நேரம் சரியில்லை அவ்வ்ளவுதான்
அதுக்கு என்னண்ணே பரிகாரம்
வேற என்ன துர்காவை கோவில் கோவிலா போய் இன்னும் நல்லா வேண்டிக்கிட்டு வா ன்னு சொல்லி அனுப்ப வேண்டியதுதான்.
No comments:
Post a Comment