Friday, November 22, 2019

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது.

முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது
சிறப்பு பாதுகாப்பு

















சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பை விலக்குவதற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை கடந்த 20-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.

சமீபத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...