Friday, November 29, 2019

வெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா?


வீட்டிலிருக்கும் பாட்டி, தாத்தாக்கள் அடிக்கடி வெற்றிலைப்பாக்கு போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஆரோக்கியத்திற்காகவே அதனை பயன்படுத்துகின்றனர் என்பது வெற்றிலைப்பாக்கு போடுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துகொண்ட பின் உங்களுக்கே புரியும்.
அன்றைய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடோ, அல்லது கேன்சரோ வந்தது அல்ல... ஆனால் நாள் முழுக்க வாயில் வெற்றிலைப் பாக்கு இருக்கும். அது எப்படி என்ற சந்தேகம் எழலாம். உடம்பிலுள்ள பித்தத்தை வெளியேற்றுவதில் பாக்குக்கு நிகர் ஏதுமில்லை. வெற்றிலை வாயிலுள்ள கிருமிகளை அழித்துவிடுகிறது. சிறிய அளவு சுண்ணாம்பு எடுத்துக்கொண்டாலும் அந்த சுண்ணாம்பு சத்து நேரடியாக உடலுக்கு செல்கிறது. இவை மூன்று சேர்ந்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால்தான் விருந்துகளிலும், அசைவ உணவுக்கு பின்னரும் நாம் வெற்றிலைப் போடுகிறோம்.
மேலும் வெற்றிலைப்பாக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், பசியை தூண்டுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வெற்றிலை போடுபவர்களுக்கு வாய்ப்புண், வாயில் துர்நாற்றம், வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பே இல்லை. வெற்றிலை சளியை குறைப்பதுடன் அதில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. உணவுக்கு பின்னர் வெற்றிலைப் பாக்கு போடுவதால் உணவில் ஏதேனும் வாயுப்பொருட்கள் சேர்ந்திருந்தால் அவை கட்டுப்படுத்தப்படும். இத்தனை நற்பயன்களுக்காகவே முன்னோர்கள் எந்நேரமும் வெற்றிலையை வாயில் அசைப்போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...