Saturday, November 30, 2019

சுமை!

மகாகவி பாரதியார், குள்ளச்சாமி என்னும் ஞானியைச் சந்திப்பது வழக்கம்.
அந்தக் குள்ளச்சாமி எப்போதும் ஓர் அழுக்கு மூட்டையைச் சுமந்து கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருப்பார்.
அவர் ஞானி என்பதை உணர்ந்துகொண்ட பாரதி, ஒருமுறை அவரிடம்,
"ஏன் இந்த அழுக்கு மூட்டையைச் சுமந்துகொண்டு திரிகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு குள்ளச்சாமி ஒரே வாசகத்தைப் பதிலாக உதிர்த்தார்: "நான் குப்பையை வெளியே சுமக்கிறேன். நீங்களெல்லாம் உள்ளே சுமக்கிறீர்கள்''
இந்நிகழ்ச்சியை பாரதி தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...