திருமாவளவன் இந்து தெய்வங்களை இழிவாக விமர்சித்துப் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார். “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்._
_இதனைத்தொடர்ந்து திருமாவளவனின் கட்சியினர், காயத்ரி ரகுராமை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசினார்கள். அந்த தொலைபேசி உரையாடல்களை காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது திருமாவளவனின் கட்சியினரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டியது._
_காயத்ரி ரகுராம் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திருமாவளவன் கட்சியினர் கூடி, மிரட்டல் விடுத்தனர்._
_இதற்கிடையே, வருகிற 27-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு, மெரினா கடற்கரைக்கு தனி ஒருத்தியாக வந்து நிற்கிறேன். திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர், இந்துக்களைப் பற்றி பேசட்டும் என்று காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு சவால் விட்டு இருந்தார்._
_இதனை தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கருத்து வெளியிட்ட திருமாவளவன், ஒட்டுமொத்த நடிகைகளையும் “அவுத்துப் போட்டு ஆடுபவர்கள்” என்று மிக கீழ்த்தரமான, வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தார். இது ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துகின்ற செயல் என்பதால், பெண்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு ஆளானார் திருமாவளவன்._
_காயத்ரி ரகுராம் சவாலுக்கு, திருமாவளவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதுதொடர்பாக காயத்ரி ரகுராம், பலமுறை திருமாவளவனுக்கு நினைவூட்டல் விடுத்தார். அதற்கும் பதிலில்லை._
_இந்தநிலையில் இன்று (27.11.2019) காலை 10 மணிக்கு காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரைக்கு வந்தார். ஆனால் அங்கு திருமாவளவனோ, அவரது கட்சியினரோ வரவில்லை. இதனால் தனது சவாலை எதிர்கொள்ள பயந்து திருமாவளவனும், அவரது கட்சியினரும் புறமுதுகிட்டு ஓடி விட்டதை உறுதி செய்துகொண்ட காயத்ரி ரகுராம், நீண்டநேர காத்திருப்புக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்._
_இதுதொடர்பாக, அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “இன்றைய தினம் மெரினா கடற்கரையில் திருமாவளவனை சந்திப்பதற்காக நான் காத்திருந்தேன். ஆனால் திருமாவளவனை காணவில்லை. அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதனால் திருமாவளவன் கட்சி தொண்டர்களை நான் ஏமாற்றும்படி ஆகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் ஜாதி, மதம் போன்றவற்றை இழிவாக எந்த எம்.பியும், கட்சித் தலைவர்களும் பேச மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு உண்மையான தலைவன், அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். நீதி வெல்லும்” என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்._
_வீராப்பு பேசிய திருமாவளவன், இந்து மதம் பற்றி விவாதிக்க ஒரு பெண்ணான காயத்ரி ரகுராம் விடுத்த அழைப்பை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வளவுதான் அவரின் துணிச்சல் என்கின்றனர் தேசபக்தர்கள்_
No comments:
Post a Comment