காயத்திரி ரகுராம் துணிச்சலாக திருமாவினை கண்டிக்கின்றார், ஆனால் திரையுலகத்திலிருந்து ஒரு ஆதரவுமில்லை அதுவும் நடிகைகள் அவிழ்த்து போடுகின்றவர்கள் என சொன்னபின்பும் திரையுலகம் கனத்த அமைதி ஏன்?
முன்பு திரையுலகம் நல்ல இந்துபடங்களையும் புராண படங்களையும் கொடுத்தது அக்காலம் நன்றாய் இருந்தது
இந்த திரையுலகில் பகுத்தறிவாதிகள் புகுந்தபின் எல்லாம் நாசமாயிற்று, ஆனானபட்ட சிவாஜி கணேசனையே, எந்த பெரியார் சிவாஜி கணேசன் என பெயர் சூட்டினாரோ அவரையே திருப்பதிக்கு சென்றுவந்தார் என விரட்டினர்
இந்துமதத்தின் நற்கருத்துக்களை சொல்வது பைத்தியகாரதனமானது அதை எதிர்த்து சொன்னால் புரட்சி படமானது
இன்னமும் ஆழமாக போய் பிராமணர்களையும் இந்து பாத்திரங்களையும் கேலி செய்யும் படங்கள் ஏராளம் வந்தன, சமீபத்தில் கூட ஒன்று வந்தது
கிறிஸ்தவர்கள் நல்ல வேடங்களில் காட்டபட்டனர், இந்துக்கள் கொடூரமானவர்களாக சித்தரிக்கபட்டனர் அல்லது கேலி செய்யபட்டனர்.
மற்ற மதங்கள் புனித மதங்களாயின ஆனால் இந்துக்களின் தெய்வங்கள் கேலிபொருளாயின
கமலஹாசன் சத்தியராஜ் என பல நடிகர்கள் இதில் விழுந்து விழுந்து உழைத்தனர், ஆனால் மறந்தும் அடுத்த மதம் பக்கம் செல்லவே இல்லை
கமலஹாசன் பாதிரி உடை போட்டு காமெடி செய்வாரா? சத்யராஜ் மசூதியில் பகுத்தறிவு பேசினாரா என்றால் இல்லை, ஒரு காலமும் இல்லை
அந்த சக்திமிக்க மீடியாவினை இந்துக்களை ஒழிக்கவும், இந்துமத அபிமானத்தை தகர்க்கவும் பார்ப்பனர்களை கேலிபொருளாக்கவும், இந்து நம்பிக்கைகளை காமெடியாக்கவும் ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்தது
1960க்கு முன் வந்த படங்களையும் பின் வந்த படங்களையும் கவனித்தால் உங்களுக்கே உண்மை புரியும்.
5 முதல்வர்கள் திரையுலகில் இருந்து வந்ததால் அதன் முக்கியத்துவம் பலருக்கு புரிந்தது, அந்த உலகை இந்து மதத்துக்கும் இந்நாட்டுக்கும் எதிரான சக்திகள் கட்டுபடுத்த துடித்தன
கட்டுபடுத்தியும் வைத்தன
எதற்கெடுத்தாலும் தமிழ், திராவிடம் இன்னும் பல இம்சைகளை பேசும் நக்சலைட் நடிகர்களும் இயக்குநர்களும் புதிது புதிதாக உருவாயினர்
இந்திய தேசிய விரோத கருத்து, இந்து எதிர்ப்பு கருத்து என தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கும் எல்லா கருத்தையும் அவர்கள் விதைத்தனர்
இவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருப்பது பழனிச்சாமி அரசு காரணம் நடிகர்களுக்கும் அவர்களுக்கும் இப்பொழுது தொடர்பில்லை
ஏதோ ஒரு சக்தி திரையுலகம் தன் கட்டுபாட்டில் இருப்பது தொடர்ந்து இந்திய இந்து கருத்துக்களை பரப்ப வசதி என கருதுகின்றது
அதுதான் ரஜினி கமலை இணைக்க முயற்சிக்கின்றது
எல்லா விஷயங்களிலும் பிரிவினை வாதிகள் மற்றும் குழப்பவாதிகள் பின்னால் திரையுலகம் நிற்கும் காரணம் அதுதான்
அதுதான் காயத்திரி ரகுராம் விஷயத்திலும் இவருக்காக களமிறங்கினால் இந்து அபிமானம் என்ற பிம்பம் வந்துவிடும் என திரையுலகை கட்டுபடுத்துகின்றது
இந்துக்களுக்கு ஆதரவாக நடிகர் நடிகையர் வரகூடாது எனும் உத்தரவு எங்கிருந்தோ வந்திருகின்றது, திருமா மேல் கடும் கோபத்தில் இருக்கும் குஷ்புவின் அமைதி அதைத்தான் சொல்கின்றது
குஷ்புவின் அமைதி "அட நீங்களுமா கைகூலி" என கேட்க வைக்கின்றது
புரட்சி பெண்ணிய நடிகைகளான சுகாசினி, ரோகினி இன்னபிற அல்ட்ராசிட்டிகள் எல்லாம் இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்க யோசிக்கின்றன
ஜல்லிகட்டு போராட்டத்திலே இது உணரகூடியது முதலில் கடும் அமைதியில் இருந்த திரையுலகம் தமிழக கொந்தளிப்புக்கு பின்பே அசைந்தது
ஆனால் ஈழசிக்கல் காவேரி என தேசிய பிரச்சினை என்றால் வரிந்துகட்டி ஓடிவரும். ஏன் என்றால் டெல்லிக்கு எதிரான போராட்டம் என்றால் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்
எல்லாம் நாடகம், பூராவும் வேஷம் எல்லாமும் யாரோ ஒரு அன்னிய சக்தியின் கைகூலிகள்
ஏதோ ஒரு சக்தி திரையுலகம் தன் கட்டுபாட்டில் இருப்பது தொடர்ந்து இந்திய இந்து கருத்துக்களை பரப்ப வசதி என கருதுகின்றது
அந்த மாயகரங்களை உடைத்து ஒழிக்காதவரை அந்த திரையுலகம் தமிழகத்தை உருப்படவிடாது...
இது அன்றைய அண்ணா ,,கருணாநிதியிலிருந்து இன்றைய கருணாஸ் வரை தொடர்ந்து நடந்து வருகிறது....
No comments:
Post a Comment