*தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம்பிரசாத் ஆகியோா் அடங்கிய உயா்நீதிமன்றம் அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது*
*வழி வழியாக நாம் கடைபிடித்து வரும் இந்து மத வழிபாடு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கோ அல்லது தமிழ்நாடு காவல் துறைக்கோ எந்த ஒரு அதிகாரமும் இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோயில் தேர்த்திருவிழாவுக்கு இரு பிரிவினருக்குள் மோதல் வரும் என்ற காரணத்தைக் கூறி போலீஸாா் அனுமதி தர மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்....
மத வழிபாடு என்பது அரசியலமைப்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. இந்த வழிபாடுகளைச் செய்ய அனைத்து மக்களுக்கும் உரிமை உள்ளது. எனவே இந்த வழிபாடுகளைத் தடுக்க அதிகாரிகளுக்கு உரிமை இல்லை. வழிபாடு நிகழ்ச்சியின்போது பிரச்னை ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் மட்டுமே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகாரம் உள்ளது. கட்டுப்பாட்டின் பேரில் மத வழிபாட்டை தடை செய்ய அதிகாரம் இல்லை. எனவே பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஊா் மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு கண்டு தோத்திருவிழாவை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment