ஜூலை 2 ஒரு சுவாரஸ்யமான நாள். ஒரு வருடத்தின் நடு நாள். ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னர் 182 நாட்களும் அதற்கு பின்னர் 182 நாட்களும் இருக்கும். நாம் பயன்படுத்தும் நாட்காட்டியானது கிரிகேரியன் காலண்டர் என குறிப்பிடப்படுகின்றது. இது ஏறத்தாழ பூமியின் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் கால அளவினை கொண்டுள்ளது. சுழற்றி நேரத்திற்கும் காலண்டர் நேரத்திற்கு இருக்கும் மிகச்சிறிய வித்யாசமே நான்குவருடத்திற்கு ஒரு லீப் வருடம் வந்து ஒரு நாள் அதிகரிக்கின்றது. கிரிகேயனின் காலண்டர் கிரிகேரி என்ற போப்பின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த காலண்டருக்கு முன்னர் ஜூலியன் காலண்டரே பயன்பாட்டில் இருந்தது. கிரிகேரி வாழ்ந்த காலம் 1502-1585. நாம் பயன்படுத்தும் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் லத்தின் மொழியில் இருந்து வந்தவை / தழுவியவை. தற்போது நிகழும் ஜூன் மாதமும் ஜூனியஸ் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான். (ஜூனோ என்ற பெண் கடவுளை குறிக்கலாம் என நம்புகின்றனர்)
அது சரி ஏன் பிப்ரவரி மாதத்திற்கு 28 அல்லது 29 நாட்கள் வருகின்றது நியாயமாக பார்த்தால் டிசம்பருக்கு தான் இந்த மாறுதல்கள் வரவேண்டும் என்று தோன்றலாம். அதுவும் சரி தான். ஆரம்பத்தில் வருடத்தின் முதல் மாதம் ஜனவரியாகவும் கடைசி மாதம் பிப்ரவரியாகவும் இருந்தது. அப்போது பிப்ரவரியில் 23 நாட்களே இருந்தன. பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கு நாட்கள் இறுதியானது. பிப்ரவரி கடைசியில் இருந்தாதால் அதற்கு 28 அல்லது 29 என வந்தது. பின்னர் மீண்டும் மாதங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன.
நடு வருட நாளில் (ஜூலை 2) என்ன செய்யலாம்?
ரொம்ப உற்சாகமா புதுவருடத்திற்கு ஏகப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் எடுத்திருப்போம். அது எல்லாம் எந்த அளவிற்கு இருக்குன்னு பார்த்து மறுஆய்வு செய்து திரும்பவும் உற்சாகமா ஆரம்பிப்போமே.
ரொம்ப உற்சாகமா புதுவருடத்திற்கு ஏகப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் எடுத்திருப்போம். அது எல்லாம் எந்த அளவிற்கு இருக்குன்னு பார்த்து மறுஆய்வு செய்து திரும்பவும் உற்சாகமா ஆரம்பிப்போமே.
புது வருடத்திற்கு தான் வாழ்த்துக்கள் சொல்வீங்களா? நடுவருட நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment