Thursday, January 2, 2020

கோலம் போட்ட பெண் பாக்., உளவாளியா? ஐ.பி., விசாரணை.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் கோலம் போட்ட பெண் பாக். உளவாளியா என மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யும் விசாரணையை துவக்கி உள்ளது.
AntiCAA,KolamProtest,GayatriKhandhadai,CAA,CAB,NRC,Pakistan,பாகிஸ்தான்,கோலம்,தொடர்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அனுமதியின்றி அடுத்தவர்கள் வீட்டின் முன் கோலம் போட்டனர். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தகராறு செய்ததால் போலீசார் எட்டு பேரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர்களோ 'கோலம் போட்டதால் போலீசார் கைது செய்து விட்டனர்' என விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.




கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஒருவர் திருவான்மியூரைச் சேர்ந்த காயத்ரி கந்தாடை. இவர் பாக்.கில் உள்ள ஒரு அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக தன் முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அமைப்புக்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. எனவே 'காயத்ரி கந்தாடையின் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்போம்' என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உளவு அமைப்பான ஐ.பி.யும் காயத்ரி கந்தாடை பாக். உளவாளியா என்பது குறித்து விசாரிக்க துவங்கியுள்ளது. காயத்ரி கந்தாடை மனித உரிமை ஆர்வலர் என சில போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். காவல் நிலையங்களில் தன் தந்தை பெயரை குறிப்பிடாமல் அவர் திட்டமிட்டு மறைத்துள்ளார். வழக்கறிஞருக்கு படித்து இருப்பதாக தெரிவித்துள்ள அவர் பாக்.கில் உள்ள சில அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததும், ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காயத்ரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண்கள் யார் யார்; காயத்ரி கந்தாடை எத்தனை முறை பாக்.கிற்கு சென்றுள்ளார்; அவர் இந்தியா குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல்கள் என்ன என்பது குறித்தும் ஐ.பி. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






முகநுாலில் படங்கள் அகற்றம்:

காயத்ரி கந்தாடை பல பெண்களுடன் கன்னத்தோடு கன்னம் வைத்து எடுத்த படங்களை தன் முகநுால் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். மேலும் அவருக்கு பாக். அமைப்புடன் இருந்த தொடர்பு குறித்தும் தெரிவித்து இருந்தார். அவற்றை எல்லாம் திடீரென நீக்கி உள்ளார். இது போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...