தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், விரைவில் தேர்தலை நடத்தி, தி.மு.க., கூட்டணியை விட, அதிக இடங்களை கைப்பற்ற, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.
சென்னையில், ஊரக உள்ளாட்சி பதவிகள் கிடையாது. எனவே, இம்மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் நடந்தது.
தேர்தலில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட, தி.மு.க., கூட்டணி, கூடுதல் இடங்களை கைப்பற்றியது. தி.மு.க., கூட்டணி அதிக இடங்களை பிடித்தும், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை பெறவிடாமல் தடுத்து, அ.தி.மு.க.,வே அதிக இடங்களை கைப்பற்றியது.
எனினும், அதிகார பலம் மற்றும் பண பலத்தால், கவுன்சிலர்களை விலை பேசி, தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியதாக, தி.மு.க., குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள ஒன்பது மாவட்டங்களில், விரைவாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், அந்த மாவட்டங்களில், கவுன்சிலர் பதவிகளை அதிகளவில் கைப்பற்றி, தி.மு.க.,வை வீழ்த்தவும், அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment