பிள்ளைகள் இதற்கு மேல் உங்கள் பேச்சை கேட்டு நடக்க கட்டாய படுத்தாதீர்கள். மாட்டார்கள். அவர்கள் சுதந்திரம் அவர்கள் உரிமை என்று திரிவார்கள்.
அறிவுரை சொன்னாலும் எனக்கு தெரியும் நான் பார்த்துக்கிறேன் நீ விடு என்று ஆரம்பிக்கும் போதே தடுத்து விடுவார்கள். அறிவுரையும் வேஸ்ட் தான்.
பணத்துக்காக மட்டுமே பெற்றவர்கள் என்று சுயநலமாக தான் நடந்து கொள்வார்கள். அதையும் தாங்கி கொள்ள தான் வேண்டும். அவர்கள் ஒரு காலத்தில் பிள்ளைகள் பெற்றோர் ஆன பிறகு அது தவறு என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் நமக்கு பயன் இல்லை.
எல்லாவற்றையும் விட மனதளவில் வெகு தூரத்தில் விலகி சென்று விடுவார்கள். இதை தாங்கி கொள்ள தான் பெற்றோர்களுக்கு நிறைய மன உரம் வேண்டும். பல அப்பாக்கள் சுலபமாக இந்த பருவத்தை கடந்து விடுவார்கள். பல அம்மாக்கள் தான் புலம்பி பட்டு தெரிந்து கொள்வார்கள்... யதார்த்தத்தை.
பெற்றவர்களுக்கு முதுமைப் பருவமும் வந்து இருந்தால் பெற்ற பிள்ளைகளிடம் இருந்து பாசத்துக்காக ஏங்குவதை விட பிள்ளை பாசத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதே மன நிம்மதிக்கான ஒரே வழி....
No comments:
Post a Comment