Wednesday, January 1, 2020

பெரம்பலூரில் ஒளிந்திருந்த நெ.கண்ணன் கைது

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷா 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய, தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏக வசனத்தில் திட்டியதுடன், 'முஸ்லிம்கள் யாராவது பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஜோலியை முடிப்பார்கள் என எண்ணினேன்' என சர்ச்சையான கருத்தை பேசினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.,மாவட்ட தலைவர் தயாசங்கர் மனு அளித்தார். இதன்படி நெ. கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.




இந்நிலையில், நெ.கண்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக, ஒரு அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பா.ஜ.,வினர் எதிர்ப்பால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிச்சென்றனர். ஆனால் அவர் திருவனந்தபுரம் சென்றதாக கூறப்பட்டது.



இந்நிலையில், தலைமறைவாக இருந்த நெ.கண்ணன், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற திருநெல்வேலி போலீசார், நெ.கண்ணனை கைது செய்தனர். திருநெல்வேலிக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெ,கண்ணனை கைது செய்ய போலீசார் வந்த தகவலறிந்து அங்கு வந்த முஸ்லிம் அமைப்பினர் கண்ணனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அங்கு கூடியிருந்த பா.ஜ.,வினரும் எதிர்கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...