Wednesday, March 18, 2020

ராஜாஜி தெளிவாக 1962 ல் இருந்து திமுகவை வழிநடத்துக்கிறார்.

1949 ல் துவங்கப்பட்ட திமுக பெரிய மக்கள் புரட்சி செய்து 1967 ல் ஆட்சியை பிடித்ததாக சொல்கிறார்கள்..இதெல்லாம் சுத்த பேத்தல்வாதம்.
1952 ல் காங்கிரஸ்ஸை எதிர்த்து களம் கண்ட ராமசாமி படையாட்சி,மாணிக்கவேல் நாயக்கர் இருவரும் 25 தொகுதிகளை கைப்பற்றினர்.இவர்கள் இருவரும் ராஜாஜி மற்றும் காமராஜரோடு 1957 க்குள் சமரசம் செய்து கொண்டு அமைச்சரவை பெற்று காங்கிரஸ்ஸோடு ஐக்கியமாகிவிட்டார்கள்..
இந்த வெற்றிடத்தை நிரப்பி 1957ல் வடமாவட்டங்களில் அதாவது தொண்டை மண்டிலத்தில் எழுந்த இயக்கம்தான் திமுக.அதனுடைய வாக்காளர்கள் தென்மாவட்டத்தவர்களின் ஆதிக்கம் பெற்ற காங்கிரஸ்ஸை எதிர்த்தவர்களும்,தங்கள் எண்ண ஓட்டத்திற்கு விரோதமாக காங்கிரஸ்ஸிடம் சமரசம் செய்து கொண்ட ராமசாமி படையாட்சி,மாணிக்கவேல் நாயகர் எதிர்ப்பாளர்களும்தான்.
1961 ல் தலித்துகளிடம் காமராஜருக்கு இருக்கும் நற்பெயரை தாங்கள் சுவீகரித்துக்கொள்ள அவருக்கு சிலை வைத்து தங்கள் தலித் தலைவர்களை தக்க வைத்துக்கொள்ளும் நிலைதான் திமுகவுக்கு இருந்தது.
காமராஜர் - ராஜாஜி மோதல் என்பது இன்றைய எடப்பாடி - டிடிவி மோதலாக பொருத்தினால் உங்களுக்கு எளிமையாக புரியும்.நீங்கள் தலைவர்களின் தன்மையை இதனோடு பொருத்தி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.அரசியல் சூழ்நிலை மட்டும்.
அதிமுகவை தன் வசம் வைத்துக்கொள்ள,அதிகாரத்திற்கு தனக்கு சவால் விடக்கூடிய,எப்போது வேண்டுமானாலும் கட்சியை கைப்பற்ற வாய்ப்பிருந்த தினகரனை தனிமைப்படுத்தும் அரசியலைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்தார்.2019 தேர்தலில் அவர் யோசிக்காமல் இறங்கிப் போய் இந்த கூட்டணியை போடக் காரணமே டிடிவியை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம்தான்.திமுக வெற்றி பெறுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை..
இதே போல காமராஜர் திமுகவால் பெரிய வெற்றியெல்லாம் அடைய முடியாது.ஆனால் கம்யூனிஸ்ட்,ராஜாஜி போன்றவர்கள் எழுந்து வராமல் இருக்க திமுக உதவும் என்று அதை குறைத்து மதிப்பிட்டதுதான்.
1962 ல் திமுகவின் பெரிய தலைவர்கள் அண்ணா உட்பட அனைவரும் தோற்கடிக்கப்படுகிறார்கள் கருணாநிதி தவிர்த்து.ஆனால் திமுக மக்களிடம் செல்வாக்கு பெற்று 50 இடங்களை பெறுகிறது.இதை புரிந்துகொண்ட ராஜாஜி தெளிவாக 1962 ல் இருந்து திமுகவை வழிநடத்துக்கிறார்.
1963 ல் பெரியார் சொல்கிறார்,'தலித்+சிறுபான்மையினர்+ராஜாஜி+கண்ணீர்த்துளிகள்(திமுக) ஒன்றாக சேருவது தெரிகிறது இதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்" என தெளிவாக குறிப்பிடுகிறார்..
முத்துராமலிங்கத்தேவர் மரணம்,ஆதித்தனார் vs காமராஜர் மோதல் என எல்லாவிதமாக உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளையும்
1967 ல் ஒரு தளத்தில் கட்டியெழுப்புகிறார் ராஜாஜி.பத்தாதற்கு காமராஜர் டெல்லி போய்விட்டார்.அடுத்து பக்தவச்சலம் முதல்வர்,ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அதனால் துப்பாக்கி சூடு,நேரு மற்றும் சாஸ்த்திரி மறைவு என அடிமேல் அடி. இதுதான் திராவிடத்தின் வெற்றிக்கோட்பாடு வளர்ந்த விதம்..அதற்கும் மேல் எம்ஜிஆர் துப்பாக்கி சூடு,எஸ்எஸ்ஆர் போன்ற திரையுலக ஆதரவு இவையும்.
திமுகவை மக்கள் கொள்கை வழி ஏற்றுக்கொண்டார்களா? இல்லை.ஏனென்றால் திகவை போலவே திமுகவுக்கு நியாயமான எந்த அடிப்படை கொள்கையும் கிடையாது.சந்தர்ப்பவாதமும் பிரிவினையும்தான் அதன் அடிப்படையே.
யார் மாற்று சக்தி? அதுதான் வெற்றிக் கோட்பாட்டின் முக்கிய துருப்புச்சீட்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...