Friday, March 20, 2020

மத்திய பிரதேசம் முதல்வர் சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே ராஜினாமா..!!

இதில், பிஜேபி தான் விளையடியுள்ளது என சுட்டிக்காட்டுகிறார்..
ஒருவேளை அப்படி பிஜேபி விளையாடியிருந்தால் .....,
சட்டப்படி அது சரியே (காங் எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா வால்தான் பலம் இழந்த நிலை)
நியாயப்படி அது சிலருக்கு சரியில்லை எனலாம்....
ஆனால் தர்மப்படி ....???
-
-
-
-
-
-
-
-
நிச்சயம் சரிதான்...!! மேலும் இது போன்ற தர்மங்கள் நடந்தேறிட வேண்டும்.
ஏனெனில், கடந்த காலங்களில், அதுவும், குறிப்பாக இந்திரா தலைமையிலான காங் ஆட்சியில், பல முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன (அது தவிர கவிழ்க்கப்பட்டவை வேறு தனி பட்டியல்). தர்மா என்னென்பது நிச்சயம், முன் வினைக்கு பின் விளைவு உண்டு, என்பதை அறியப்படுத்தும். அதுவே கர்மா . ஆனால், அதில் சற்று கால தாமதம் இருக்கலாம். (அதுவும் அவரவர் கர்மா வினைப்படி ...!! )
நம் இதிகாசங்களிலும் அவற்றை காணலாம். ஒருசிலவற்றைல், முன் ஜென்ம வினை/ விளைவு என்றும் படித்துள்ளோம்.அதுபோல்தான், அந்நாளில் காங். அரங்கேற்றியவற்றுக்கு வட்டியும் முதலுமாக, இந்நாளில், மத்தியிலும், மாநிலத்திலும், விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
விரைவில் மற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களிலும் ஆட்சி, MP , MLA க்கள் என்று இழந்து, காந்தி சொன்ன "காங்கிரஸை கலைத்து விடுவோம்" என்பது நிறைவேற காத்திருப்போம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...