1. அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
2. இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் கண்டுபிடிக்காத நிலையில், அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களுக்கும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாகும்.
3. வெளியே செல்ல முடியாதவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அவர்களது விடுப்புகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் இருக்குமாறு நிறுவனங்கள் /தனியார்களிடம் வேண்டுகோள்.
4. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் என்பதால், அனாவசியமாக பெருமளவில் பொருட்களை வாங்கிக் குவித்து விடாதீர்கள்.
5. கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினர் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் தனி நபர்களும் கொரோனாவை எதிர்கொள்ள, அரசாங்கம் விதிக்கிற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கவும்.
6. இந்த இக்கட்டான சூழலில், உறுதியும், கட்டுப்பாடும் அனைவருக்கும் மிக அவசியம்.
7. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அதுகுறித்து ஆராய்ந்து உரிய முடிவுகளை எடுக்க நிதியமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
8. 60/65 வயதுக்கு மேற்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
9. வழக்கமான உடற்பரிசோதனைகள்/ தள்ளிப்போடத்தக்க அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை தயவு செய்து ஒத்திப்போடவும். மருத்துவமனைகள், சுகாதார ஊழியர்கள் மீது அனாவசியமான அழுத்தம் தராமலிருக்க இது உதவும்.
10. வருகிற மார்ச் 22-ம் தேதி ( ஞாயிறு) காலை 07:00 மணி முதல் இரவு 09:00 வரை பொது ஊரடங்கு (Janata Curfew) கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்கவும்.
11. மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு, சயரன் ஒலிக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவும். சயரன் அடித்ததும் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில், ஜன்னலில் நின்றபடி 5 நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்.
அனைவரும் பிரதமர் சொன்னதைக் கடைபிடிப்போம். பாரதத்தை கொரோனாவிலிருந்து காப்போம்.
பாரத் மாதா கீ ஜே! வந்தே மாதரம்!!
No comments:
Post a Comment