Friday, March 6, 2020

ஜக்கியை எல்லாரும் நோண்டும் பொது நாம் ஏன் அவரின் பக்கத்து கடைக்காரர் தினகரனை நோண்ட கூடாது:

நெல்லை மாவட்டம், சுரண்டை என்னும் ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தினகரன் தான் வகித்து வந்த வங்கி கிளார்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எம்பதுகளின் தொடக்கத்தில்.
அளவுக்கு அதிகமாக ஜெபக் கூட்டங்களை நடத்த அவருக்கு அயல்நாட்டு நிதி வர தொடங்குகிறது, அதை வைத்து எண்பதுகளின் மத்தியில் குறைந்த விலையில் கோயம்புத்த்தூரில் வாங்கிய நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்படுகிறது அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கபடுகிறது.
2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தினகரன்தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 45,000 கோடி ருபாய்கள் மடடுமே!!!
மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் புனிதமான மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் ஒலிம்பிக்கில் ஓடுவான், குருடன் கலர் திரைபடம் பார்ப்பான், செவிடன் இளையராஜா இசை கேட்பான், ஊமை லியோனி பட்டி மன்றத்தில் பேசுவான்,” என்று கலர்கலராக பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் சலவை செய்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் மறைமுகமாக கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் இந்த நவீன திருடர்கள்.
இவர்களுக்கு ஏதாவது உடல் நல குறைவு வந்தால் மருத்துவமனைக்கு போகிறார்கள் ஆம் முடவனை நடக்க வைக்கும் தினகரனின் மகள் ஏஞ்சல் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த போது இவரால் உயிர் கொடுக்க முடிய வில்லை... அது போல தனக்கு " கிட்னி ஆப்ரேஷன்" செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார். ஆனால் கண் தெரியாதவர்களுக்கு கண் பார்வையை கொண்டு வந்து விடுவாராம், நல்ல காமடி.
கள்ளநோட்டு அடிப்பவன், பித்தளையைத் தங்கம் என்று ஏமாற்றுபவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன்…. என்று சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள் தான், இந்தக் கள்ளப்பிரசங்கிகளும். இன்றைய உலகத்தில் வாழும் 600 கோடி மக்களில் தினகரனை மட்டுமே இயேசு தேர்ந்தெடுத்து, இவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஓட்டல்களைத் தேடிப் போய் காட்சியளிக்கிறார், மீதி உள்ள 599 கோடியே, 99 லட்சத்து, 90999 பேரும் தினகரனைப் போல இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல என்று இயேசு நினைக்கிறார் என்றால் , இது இயேசுவையே தினகரன் அவமானப்படுத்தும் செயலா? இல்லையா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...