Sunday, March 1, 2020

ஆர்டிக் கன்பார்ம்.

98 வயதாகும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 24-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில்,தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனை நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய மருத்துவர்கள் அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி வைத்திருப்பதாகவும், நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை முதலே, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாக விரைந்து வந்து பார்த்து செல்கின்றனர்.
பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை வந்த முதன்மை செயலாளர் நேரு அறிவாலயம் வழியே சென்றாலும், அறிவாலயத்துக்கு செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...