Monday, March 16, 2020

ராஜ்யசபா எம்.பி ஆக ரஞ்சன் கோகாய் நியமனம்.

சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் நேற்று (மார்ச் 16) ராஜ்யசபா எம்.பி ஆக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.





இந்தியாவின் 46 வது சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக அக்.,3 2018 ல் ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். இவர் நீதிபதியாக பதவியில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்வு அளித்தார். சர்க்குரிய பாபர் மசூதி வழக்கிற்கு கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அதில் தான் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி ராமர் கோவில் கட்டவும் அனுமதி அளித்தது. தொடர்ந்து, நவ., 17 ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து, 250 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில் 238 பேர் மறைமுக தேர்தல் மூலமாகவும் 12 பேர் ஜனாதிபதியின் நியமனத்தின் மூலமும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவின் நலனை கருத்திற்கொண்டு ராஜ்யசபாவின் எம்.பிக்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் ராஜ்யசபாவின் நியமன எம்.பி ஆக ரஞ்சன் கோகாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். ராஜ்யசபாவில் 1 நியமன எம்.பியின் பதவி காலம் முடிவடைவதால் அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.




மேலும் கோகாய், பதவியில் இருந்து ஓய்வு பெற்று 4 மாதங்கள் கூட ஆகாதநிலையில் அவருக்கு புதிய பொறுப்பு (ராஜ்யசபா எம்.பி) நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...