தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியை, நேற்று ராஜினாமா செய்தார். பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், போட்டியில் உள்ளனர்.
தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அன்பழகன், 97, உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக, கடந்த, 7ல் காலமானார். அவர் வகித்து வந்த பொதுச்செயலர் பதவிக்கு, தி.மு.க., முன்னணி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அன்பழகன், 97, உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக, கடந்த, 7ல் காலமானார். அவர் வகித்து வந்த பொதுச்செயலர் பதவிக்கு, தி.மு.க., முன்னணி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட், கட்சி தலைவர் ஸ்டாலிடம், பொருளாளராக உள்ள துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் வகித்து வந்த, பொருளாளர் பதவியையும், அவர் ராஜினாமா செய்தார். தற்போது, பொதுச் செயலர், பொருளாளர் ஆகிய இரு பதவிகளும் காலியாக உள்ளன.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம், வரும், 29ல், சென்னை, அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், 1,500 பேர் பங்கேற்க உள்ளனர். அப்போது, பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்.தற்போது, பொதுச் செயலராக, துரைமுருகன் மட்டும் விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஆனால், பொருளாளர் பதவிக்கு, டி.ஆர்.பாலு, கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு, அ.ராசா போன்றவர்கள் மத்தியில், போட்டி உருவாகி உள்ளது. கட்சியில் மூத்தவர் என்ற அடிப்படையில், டி.ஆர்.பாலுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என, கூறப்படுகிறது. எனினும், பொருளாளர் பதவிக்காக, ஸ்டாலினிடம், யாரும் வெளிப்படையாக, விருப்பம் தெரிவிக்கவில்லை. அரசியல் கட்சி விவகாரங்களில், சில நேரங்களில், எதிர்பாராத முடிவுகள் எடுக்கப்படும். எனவே, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர், பொருளாளர் பதவியை பிடிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, ஸ்டாலின் அறிக்கை:
வரும், 29ல் நடைபெறும், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என, இம்மாதம், 15ல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுச்செயலர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், அதனால், தம் பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், துரைமுருகன் என்னிடம் தெரிவித்துள்ளார்; இதை ஏற்றுக் ள்கிறேன்.எனவே, பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment