Friday, March 6, 2020

யார் இந்த மாரிதாஸ்?

வசதியான வியாபார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய லட்சியத்திற்காக பேராசிரியராக கிட்டத்தட்ட ஏழுகல்லூரிகளில் பணியாற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்,, பேராசிரியர் தாஸ் என்றாலோ,,, “தோழர்” தாஸ் என்றாலோ மதுரையில் பிரபலம்... என்னே தோழரா? என்று புருவமுயர்த்துவது புரிகிறது,,, ஆமா...
கம்யூனிஸ்டாகத்தான் இவர் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்,, ஒரு கட்டத்தில் அது தோல்வியடைந்த கொள்கை, எதார்த்தத்துற்கு ஒவ்வாதது என தெளிந்து ஆசிரியராகவே தொடரலாமா என்று இருக்கும் போது தான் அன்னாஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது,,, அதன் மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக அதாவது தலைநகர் சென்னையில் நடந்ததை விட அமர்க்களமாக நடத்தி முடித்தார்... பாதை மாறியது...
அதுவரை Social Media-க்களின் பக்கம் அவரது கவனம் இல்லை, மாணவர்களுக்கு பாடம் நடத்தவே பத்தி பத்தியாக கட்டுரைகளை தூக்கிக்கொண்டு முகநூல் வந்தார்,,, நேர்மையும் தைரியமும் உண்மையும் இருந்ததால் அமோக வரவேற்பு கிடைத்தது...
பின்னர் White Board-ஐ தூக்கிக் கொண்டு YouTube-வந்து பாடம் நடத்தினார். புள்ளிவிவரங்கள் அரசியல் தவிர சினிமா, கிசுகிசு, அமானுஷ்யம், புரளி என எதுவும் இல்லாததால் முதலில் கொஞ்சம் திணறினாலும் சரியான நேரத்தில் தமிழ் சமூகம் இவருக்கான அங்கீகாரத்தைக் கொடுத்தது. இன்று சமூகவலைதளங்களில் ஐந்துலட்சம் Followerகளை கடந்து அநாயசமாக சென்று கொண்டிருக்கிறார்,,,
படிப்பதற்கென்றே லண்டன் ஜெர்மன் உட்பட உலகம் முழுக்க இருக்கும் பத்திற்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூலகங்களில் வருடம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் சந்தா செலவு செய்து உண்மையை தெரிந்துகொள்கிறார், படித்தலின் மீதான இவரது ஆர்வம் அலாதியானது...
இவருடைய பெயர் மரியதாஸோ, மரிதாஸோ அல்ல,,, மாரி+தாஸ்,,, மாரி என்றால் மழை, தாஸ் என்றால் காதலன் அதாவது மழைக்காதலன்...
இது எல்லாவற்றிற்கும் மேல் இவர் ஒரு கடுமையான உழைப்பாளி,,, இன்று பிறந்த நாள் “Cheers let’s celebrate the Special Day” என்று இல்லாமல் இன்றும் டிஜிட்டல் போர்டை எடுத்துக்கொண்டு பாடம் நடத்த வந்தாலும் வந்துவிடுவார், திமுக கண்ணை எப்படி நோண்டலாம் என யோசித்துக் கொண்டிருப்பார்... ப்லீஸ் இன்று ஒருநாளாவது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் Dear Writer😊
இவர் வீடியோ வெளியிடுவது மட்டும் தான் வெளியில் தெரியும், பல Urban Naxalகளை வீட்டோடு உட்கார வைத்ததில் இவரது களப்பணி அளவில்லாதது, நேரம் வரும்போது உண்மை வெளிவரும்...
மேடை மற்றும் வீடியோக்களில் கோபமாக பேசினாலும் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர். நேரில் வசீகரமான தோற்றமுடையவர், வீடியோவில் ஏன் தான் டெரராக காட்சி தருகிறாரோ தெரியவில்லை...
தாஸ்,,, இளம் எழுத்தாளர் மாரிதாஸ் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து பகிர்வதில் மகிழ்ச்சி🎂இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் நீடித்த வாழ்வும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...