Wednesday, March 4, 2020

எலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன?

எலுமிச்சம்பழத்திற்கு தீய சக்திகளை விரட்டும் திறன் உண்டு என்று நமது நம்பிக்கை அமைந்திருப்பதே இதன் காரணம். எலுமிச்சம் பழச் சாறினில் சிட்ரிக் அமிலம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சிட்ரிக் அமிலத்திற்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு விசை என்பது உண்டு. தன்னிலை மறந்து அருள் வந்து ஆடுபவர்களின் வாயினில் எலுமிச்சம்பழத்தினை திணிப்பதை பார்த்திருப்போம். அவர்களும் அதனைக் கடித்து அதன் சாறு நாவினில் இறங்கும்போது தன் சுயநினைவிற்குத் திரும்புவதையும் கண்டிருப்போம். குங்குமம் என்பது மஞ்சளோடு சுண்ணாம்பினைச் சேர்த்து தயாரிக்கப்படுவது.
இந்த மஞ்சள் என்பது கிருமி நாசினி என்பதை நாம் படித்திருப்போம். அதே போல வண்டு முதலான விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பகுதியில் சுண்ணாம்பினைத் தடவுவார்கள். மஞ்சளுக்கும், சுண்ணாம்பிற்கும் விஷக் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் விரட்டும் சக்தி உண்டு. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சம்பழத்திற்குள் கிருமிநாசினியாக செயல்படும் குங்குமத்தைத் தடவி வீட்டு வாயிற்படியில் வைத்தாலும் அல்லது பிழிந்து சாறினை தரையில் விடுவதாலும் அந்த வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும் அதாவது விஷக்கிருமிகளும் அண்டுவதில்லை என்று நம்புகிறார்கள். இதுவே எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பதன் ரகசியம் ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...