அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் பாஜகவில் இணைய இருப்பதாகவும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவில் கட்சி ரீதியாக முக்கிய பதவிகள் கிடைக்க இருப்பதாக செய்தியாளர்கள் மத்தியில் பேச்சுக்கள் பேசப்பட்டு வருவது அமைதியாக அரசியலில் கரைந்துகொண்டிருக்கும் அமமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைக்கப்பட்ட தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் தலையெடுத்தவர் TTV தினகரன் அதிமுக சின்னத்தை பெறுவதை அடுத்து நடைபெற்ற சட்டம் போராட்டத்தில் பன்னீர் செல்வம் – பழனிசாமி இருவரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் பதவியை இழந்த எம் எல் ஏக்கள் ஆகியோர் வலியுறுத்தலின்படி புதிய கட்சியை தொடங்கினார்.
இதோ ஆட்சியை கலைத்து விடுவேன்...
அதோ ஆட்சியை கலைத்து விடுவேன்...
நான் சட்டசபைக்குள் நுழையும்போது முதல்வர் பழனிச்சாமி எழுந்து நிற்பார்...
அதிமுக எம்எல்ஏ க்கள் அனைவருமே என் பின்னால் நிற்பார்கள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தார் தினகரன்
அதோ ஆட்சியை கலைத்து விடுவேன்...
நான் சட்டசபைக்குள் நுழையும்போது முதல்வர் பழனிச்சாமி எழுந்து நிற்பார்...
அதிமுக எம்எல்ஏ க்கள் அனைவருமே என் பின்னால் நிற்பார்கள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தார் தினகரன்
இதை நம்பிய திமுக எதிரிக்கு எதிரி நண்பன் எனும் தவறான தத்துவார்த்தத்தால்... தயவால்...
ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற வைக்கப்பட்டார்...
ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற வைக்கப்பட்டார்...
அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய TTV தினகரன் 10-12 % வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் படு தோல்வியை தழுவினார்,
அனைவரும் டெபாசிட் இழந்த னர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்பார்த்தபடியே படுதோல்வியை தழுவினர்
அனைவரும் டெபாசிட் இழந்த னர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் எதிர்பார்த்தபடியே படுதோல்வியை தழுவினர்
இந்நிலையில் TTV ஆதரவாளர்கள் ஒருவர் மாறி ஒருவராக அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கும் தாவினர், தற்போது அவருடன் இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவுக்கு
ஒரு சிலரே.,
ஒரு சிலரே.,
முன்புபோல் ஊடகங்களிலும் TTV தினகரன் பேச்சுக்கள் முக்கியத்துவம் பெறுவது இல்லை, வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பங்குபெற்று தேர்தலை சந்திக்கலாம் என்றால் இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு புதிதாக கட்சி தொடங்கும் ரஜினி மட்டும்தான்...
அவரும் வரும்... ஆனா வராது என்பது போல..
பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அவரும் வரும்... ஆனா வராது என்பது போல..
பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்துதான் பாஜகவில் இணையலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் TTV.
இதனையடுத்து டெல்லியில் தனக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் மத்திய அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும் அந்த பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்துள்ளார், இந்த சந்திப்புகளில் இருந்து விரைவில் TTV தினகரன் பிரதமர் முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்றும் இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் தயாராகிவிட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து இரண்டு தரப்பிலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை, பாஜகவில் TTV தினகரன் இணைந்தால் அதனை அவரது ஆதரவாளர்கள் ஏற்று கொள்வார்களா? TTV தினகரனை பாஜகவினர் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்...
#அரசியல்ல_இதெல்லாம்_சாதாரணமப்பா...!!!????!??!!!
No comments:
Post a Comment