சீன எல்லையோரம் இந்தியா சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவுடனான எல்லைக்கு பொறுப்பான சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகம் சுமார் 2 லட்சத்து 10ஆயிரம் முதல் 2லட்சத்து 30 ஆயிரம் துருப்புகள் வரை நிலைநிறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போர்க்காலத்தில் சீனாவால் இத்தனை வீரர்களையும் களமிறக்க முடியாது. காரணம் ஸின்ஜியாங் மற்றும் திபெத்தில் போராட்டங்களை அடக்கவும், ரஷ்ய எல்லையிலும் கணிசமான அளவில் படைகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல இதில் பெரும்பாலான சீன படையினர் இந்திய எல்லையோரத்தில் நிலைநிறுத்தப்படாமல் உட்பகுதிகளில் உள்ளனர் ஆனால் இதற்கு நேர் மாறாக இந்திய படைகளில் பெரும்பாலானவை சீன எல்லையோர பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சீன விமானப்படையும் கணிசமான அளவில் இந்தியாவுக்கு எதிராக பலவீனமான நிலையில் உள்ளது.
சீனாவின் மேற்கு கட்டளையகம் 101 நான்காம் தலைமுறை போர்விமானங்களை கொண்டுள்ளது. அவற்றில் பல ரஷ்ய எல்லை பாதுகாப்பிலும் பயன்படுத்தி வரப்படுகின்றன. அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் 💯 க்கும் மேற்பட்ட நான்காம் தலைமுறை போர் விமானங்கள் சீனாவை எதிர்நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இப்போது இந்திய விமானப்படை முற்றிலும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது இந்திய விமானப்படையின் #சுகாய்_30 சூப்பர்சானிக் விமானத்தில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான '#பிரமோஸ்_சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். மணிக்கு 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தரை, வான் மற்றும் கடலில் இருந்து இந்த ஏவுகணையை எதிரிகளை நோக்கி ஏவ முடியும். எதிரி நாட்டு வான் தடுப்பு சாதனங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பங்கள் இது செல்லும் வழியை அறிந்துகொள்ளும் முன்னே இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி விடும்.
மேலும் சீன விமானப்படையின் போர் விமானங்கள் எல்லைக்கு அருகில் உள்ள தளங்களில் இருந்து இயங்கினால் அதிக ஆயுதங்களை சுமக்க முடியாது. அதனால் உட்பகுதிகளில் உள்ள படைத்தளங்களை பெரிதும் நம்ப வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு அதிக தொலைவு காரணமாக எரிபொருள் தீர்ந்து குறைந்து நேரமே சீன போர்விமானங்கள் பறக்க வேண்டிய நிலை உள்ளது.
சீன விமானப்படை விமானிகளுக்கு போர் அனுபவம் அறவே இல்லை, தரைகட்டுபாட்டு மையங்களை தான் பெரிதும் நம்பி செயல்படுகின்றனர் ஆனால் இந்திய விமானப்படையின் விமானிகள் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள். 4 போர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் ஒடுபாதைகளை தாக்க சீனா முடிவெடுத்தால் அதிலும் சிக்கல்கள் உள்ளன. காரணம் ஒரு நாளைக்கு 660 பலிஸ்டிக் ஏவுகணைகள் சீனாவுக்கு தேவைப்படும் ஆனால் சீனாவிடம் இருப்பதே 1200 இடைதூர மற்றும் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டே நாட்களில் காலி ஆகிவிடும்.
இதைத்தவிர இந்திய தரைப்படை உலகிலேயே மிகப்பெரிய அனுபவம் மிகுந்து மலையக போர்ப்படை பிரிவுகளை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக நாட்டில் உள்ள ராணுவ வீரர்களுக்கும் மலையேற்றப் பயிற்சியை இந்திய ஸ்கவுட் பிரிவு சிறப்பாக பயிற்றுவித்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் தரைப்படை விமானப்படை கப்பல் படை என அனைத்து வகையான படைப் பிரிவுகளும் உலக நாடுகளிலுள்ள பல்வேறு படைப் பிரிவுடன் இணைந்து அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தின் அதிகப்படியான பயிற்சியும் அதிகப்படியான கற்றலும் உலக நாடுகளிலுள்ள போர் பயிற்சி திறன்களை மிக நுணுக்கமாக அறிந்து கொள்ள உதவியாக இருந்துள்ளது.
மேலும் இந்திய ராணுவத்திற்கு சர்வதேச அளவில் அதிகப்படியான பயிற்சிகள் மற்றும் போர் நுணுக்கங்கள் கிடைத்துள்ளன.ஆனால் இத்தகைய எந்தவிதமான போர் திறனும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து போர் பயிற்சியும் சீனாவுக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை. ஏனெனில் சீனாவை உலக நாடுகள் யாவும் நம்ப மறுக்கின்றனர். அவர்கள் மற்ற நாட்டிற்கு சென்றால் அவர்கள் செய்யும் முதல் வேலை அந்த நாட்டு தொழில்நுட்பத்தை திருடி சீனா நாட்டு தொழில்நுட்பத்தோடு புகுத்தி மலிவான பொருளாக மாற்றி விடுவதால் அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள எந்த நாடும் விரும்புவதில்லை.
உலகிலேயே தகவல் மற்றும் தொழில் நுட்பத்தை திருடுவதில் சீனாவை மிஞ்ச இன்று வரை வேறு யாரும் கிடையாது.
சீனாவின் போர் தளவாடங்கள் பற்றி சொல்ல தேவை இல்லை சீனப் பட்டாசு எப்படியோ அப்படியே அதன் போர் தளவாடங்களும். சீன பட்டாசு இந்திய சிவகாசி பட்டாசுடன் போராட முடியுமா போட்டி போட முடியுமா?.
உலகிலேயே மிகப்பெரிய அடக்கு முறையுடன் மக்களை ஆளும் ஒரு அரசு என்றால் அது சீன கம்யூனிச அரசு என்றே கூறமுடியும். மிகப்பெரிய மனக்குமுறலுடனே சீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர் கண்டிப்பாக ஒருநாள் இந்த குமுறல் மிகப்பெரிய எரிமலையாக மாறும் அன்று சீனா பாடு திண்டாட்டம் தான்.அது இந்தியாவிற்கு மாபெரும் கொண்டாட்டம் தான்.
ஜெய்ஹிந்த்
🌹🇮🇳🌹🇮🇳🌹
🌹🇮🇳🌹🇮🇳🌹
No comments:
Post a Comment