நமக்கு இறைவன் விதித்த கடமைகளைச் செய்யும் பொழுது இறைசிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த மானிடப்பிறப்பு எடுத்ததின் பயனை அடையலாம். இதற்கு 11ஆம் வேதத்தில் காரைக்கால் அம்மையார் கூறும் வழிகளை காண்போம்.
காலைப்பொழுது மலர்கிறது. சூரியன் தனது சிவந்த கதிர்களை வீச , அப்பொழுது நமக்கு சிவபெருமானின் சிவந்த திருமேனி நினைவிற்கு வரவேண்டும்.
கடும்பகல் -உச்சிபொழுது வருகிறது. சூரியனின் வெண்ணிறக் கதிர்களால் உலகமே வெண்மையாக தோன்றுகிறது. இப்பொழுது நாம் வேலைகளை செய்து கொண்டே சிவபெருமான் திருமேனியில் அணிந்துள்ள வெண்மையான திருநீறு நினைவிற்கு வரவேண்டும்.

மீண்டும் மாலை நேரம் வருகிறது. வானம் சிவப்பாகத் தோன்றுகிறது. இந்த அழகிய மாலைப் பொழுதில் விடையேறும் பெருமானின் சிவந்த சடைக்கற்றையை நினைவில் நிறுத்த வேண்டும்.
ஒரு நாளின் முடிவாக இரவு நேரம் வருகிறது.இருளைப் பார்த்ததும் நாம் அடியார்தம் அல்லல்களையெல்லாம் தீர்க்கும் சிவபெருமானின் நீலகணடத்தை நினைத்து போற்ற வேண்டும்.இவ்வாறு நாள் முழுவதும் சிவசிந்தனையுடன் இருந்தால் நமக்கு துன்பமில்லை....
இவற்றையெல்லாம் இயம்பி நிற்கும் அம்மையாரின் அரிய பாடல்...
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு-மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவருக்கு
வீங்கிருளே போலும் மிடறு.

அற்புதத் திருவந்தாதி.
இமையா துயிரா திருந்தாய் போற்றி!
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி!!
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி!!
No comments:
Post a Comment