#அரசுமருத்துவமனையின்பெருமை.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 19வயது நிறைமாத கர்ப்பிணி பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து மயங்கிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 19வயது நிறைமாத கர்ப்பிணி பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து மயங்கிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்.
மிகவும் சிக்கலான நிலை. வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து காப்பாற்ற வேண்டும். அதே சமயம் தாயின் மூளையில் ஏற்பட்டியிருக்கும் ரத்தக்கட்டை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி காப்பாற்ற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ராஜா விக்னேஷ், மகப்பேறு மருத்துவர் ராஜலட்சுமி, மயக்க மருந்து நிபுணர் மரு.மாணிக்கவாசகம், குழந்தைகள் நல மருத்துவர் ஞானசேகரன், அறுவை சிகிச்சை நிபுணர் மரு.அனிஷ், ஆகியோர் கொண்ட குழு சிகிச்சையை துவங்கி குழந்தையையும் தாயையும் காப்பாற்றினர்.
அங்கே பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணாக்கர் என அனைவருக்கும் பாராட்டு குவிகிறது.
பைசா பணம் செலவில்லாமல் நிகழ்ந்த அறுவை சிகிச்சை.
No comments:
Post a Comment