Monday, June 1, 2020

திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா இடிப்பு.

போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பதாகக் கூறி, திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா நெடுஞ்சாலைத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.
திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் நிறுவப்பட்ட பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலையை கடந்த 1968- ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அமைச்சா்கள் மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் ரவுண்டானாவின் அளவைக் குறைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அண்ணா சிலை ரவுண்டாவை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா். உள்ளேயிருந்த செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னா், ரூ.40 லட்சம் செலவில் மிக குறுகிய அளவிலான ரவுண்டானா இதே பகுதியில் அமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.
திருச்சி அண்ணா சிலை ரவுண்டானாவை இடித்து அகற்றியது போன்று, போக்குவரத்து நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ ரவுண்டானா போன்றவற்றையும் இடித்து அகற்றி, அங்கு குறுகிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...