Sunday, June 7, 2020

ஓட்டல் , டீக்கடையில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி!

தமிழகத்தில், இன்று முதல், ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இக்கடைகள் திறந்திருக்கலாம். வழிபாட்டுத் தலங்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு, இப்போதைக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில், வரும், 30 வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, டீக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில், நேற்று வரை, 'பார்சல்' மட்டும் வழங்கப்பட்டது. அந்த நடைமுறை தளர்வு செய்யப்பட்டு இன்று முதல், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், ஓட்டல்களில் உள்ள, மொத்த இருக்கை களில், 50 சதவீதம் மட்டுமே, வாடிக்கையாளர்கள் அமர்ந்து, உணவு அருந்த அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது. 'ஏசி' வசதி இருந்தாலும், இயக்கப்படக் கூடாது. அதேபோல், டீக்கடைகளிலும், இன்று முதல் மொத்த இருக்கைகளில், 50 சதவீத அளவு மட்டும், வாடிக்கையாளர்கள் அமர்ந்து, டீ குடிக்கலாம். மேலும், டீக்கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை, இன்று முதல், காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணி வரை செயல்பட, அனுமதிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கடைகள் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பின்பற்ற வேண்டிய, நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, தமிழக அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
* கடைகளின் நுழைவு வாயிலில், கைகளை கழுவ, சோப்பு அல்லது சானிடைசர் மற்றும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்
* கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்
* கடைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். ஒரே சமயத்தில், நான்கு அல்லது ஐந்து வாடிக்கையாளர்களை மட்டும், கடைக்குள் அனுமதிக்க வேண்டும்
* முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* கடையின் தரை, மேஜை, கதவு போன்றவற்றை தினமும் பத்து முறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்
* கடை ஊழியர்களுக்கு இருமல், காய்ச்சல் இருந்தால், மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து, வீட்டிலிருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்

* நோய் அறிகுறி உள்ள வாடிக்கையாளர்களை, கடைக்குள் அனுமதிக்க வேண்டாம்

* கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, கைகளை சுத்தம் செய்த பிறகே, உளளே அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு அனுமதியில்லை


தமிழகத்தில், வழிபாட்டு தலங்கள், மார்ச், 25 முதல் மூடப்பட்டுள்ளன. அவற்றை திறக்க வேண்டும் என, ஆன்மிக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.மத்திய அரசு, இன்று முதல் வழிபாட்டு தலங்களை, பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க, அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில், வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக, அனைத்து சமயத் தலைவர்களுடன், 3ம் தேதி, தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.எனினும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நோய் பரவல் குறையாததாலும், வழிபாட்டு தலங்களைத் திறந்தால், நோய் பரவல் இன்னும் வேகம் எடுக்கும் என்பதாலும், பக்தர்கள் தரிசனத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...