Tuesday, April 6, 2021

மனசை "இலேசாக" வைத்திருக்க வழிகள் 10.

 (இதில் ஏதேனும் சிலவற்றை

செய்தாலே போதும்.)
1.மனதை relax ஆக்க, முதலில் ஓரிடத்தில் தனியாக அமர்ந்து relax...relax....relax.. (அமைதி, அமைதி, அமைதி) என வாய்விட்டோ, மனதிற்குள்ளோ சொல்ல வேண்டும்.
2.பிரச்சனை என்ற காற்றடைத்த பலூனை "இதுவும் கடந்து போகும்"என்ற சிந்தனையுள்ள ஊசியால் குத்தி பலூனை காணாமல்
போகச் செய்ய வேண்டும்.
3. பாவமூட்டையை குறைக்க,
ஏற்பட்டதே இத்துன்பம் என எண்ணி
பாரம் குறைந்ததாக கற்பனை
செய்தல் வேண்டும்.
4.மனம் இலேசாக, உடனடியாக செய்ய வேண்டியது..கண்ணாடி முன்
தனிமையாக நின்று, "ஆ"என வாயைத் திறந்து பற்களை எண்ணிப்
பார்க்க வேண்டும்.
5.வாய்ப்பு கிடைத்தால், சின்ன குளியல் போட வேண்டும். சிறந்த
ஒன்று நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது அதைப் பெற
நாம் தயாராகிறோம் என எண்ண
வேண்டும்.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள நிச்சயம் உதவும்.
6.பிடித்த சினிமா பாடலை பாடிக்
கொண்டிருக்க வேண்டும்.
7.அருகிலுள்ள மருத்துவமனைக்கு
visitor ஆக சென்று வரவேண்டும்.
8.தியானம், யோகா, நடைப்பயிற்சி
என ஏதேனும் ஒன்றில் ஈடுபட வேண்டும்.
9.பிடித்த ஆக்கப்பூர்வமான புத்தகத்தை எடுத்து, ஆரம்பத்தில் இருந்து படிக்காமல் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து படிக்க வேண்டும்.
10.வருத்தத்தை இவ்வுடலுக்கும், இவ்வுயிருக்கும் என் அனுமதியின்றி
பிறர் தரமுடியுமா? என எண்ணி,
சிரித்து, சிரித்து வருத்தம் வரவிடாமல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...