முட்டாள் பழிவாங்க துடிப்பான்......
புத்திசாலி மன்னித்து விடுவான்.....
அதிபுத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்.....
"நீங்கள் யார்" என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!
விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே....
நீ விரும்பியதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் இருக்காதே!!!!
நாம் அம்மாவிடம் அடி வாங்கி பாட்டியிடம் ஆறுதல் தேடிய நாட்கள்.....
பெரும்பாலும் இந்த சந்ததிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை!!
எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகிறோம், "ஆகவே"
என்ன நினைக்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்!!!
பெற்றோர்கள் எது சொன்னாலும் பொறுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்
அவர்கள் கற்றுக்கொடுத்த பேச்சு திறமை அவர்களிடமே காட்டாதீர்கள்
"ஏனென்றால் நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்"!!!
திறமைகளை வளர்த்து
பொறுமையினை பெருக்கி
கோபத்தை கட்டுக்குள் வைத்து வாழ்பவனுக்கு எங்கும் எதிலும்
"வெற்றி நிச்சயம்"!!!
திறமையின் மூலம் புகழைப் பெறலாம்....!
ஆனால் ஒழுக்கத்தின் மூலமே "சிறந்த மனிதன்" என்ற அடையாளத்தை பெறமுடியும்!!!
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல்...
உழைப்புக்கு முதலிடம் கொடுத்தாள்...!
"வாழ்க்கை உன்னதமாக இருக்கும்"!!!
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்று நினைப்பதை விட....
நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும் என நினையுங்கள்!!!
சிந்திக்கும் நேரம் குறைவாக
இருந்தால்,
நல்லதை மட்டும் சிந்தியுங்கள் !!
சந்திக்கும் நேரம் குறைவாக
இருந்தால்,
நல்லவர்களை மட்டும் சந்தியுங்கள்!!!
"நம்மால் முடியாது என்று நினைப்பவன்"
அடுத்தவனைப் பற்றி விமர்சிப்பார்
முடியும் என்று நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்!!!
இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்!!!
நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது
வாழ்ந்து முடிந்து பின்பு நம்மை யாரும் மறக்கக்கூடாது
அதுதான் நம் வாழ்வின் வெற்றி.....!
No comments:
Post a Comment