Sunday, April 4, 2021

அ.தி.மு.க., விளம்பரம்: ஸ்டாலின் எரிச்சல்.

 ''தோல்வி பயத்தில் ஆளுங்கட்சி கூட்டணி, 'தி.மு.க., செய்த அக்கிரமங்கள்' என, நாளிதழ்களில் பக்கம், பக்கமாக, செய்தி வடிவில் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது,'' என, ஸ்டாலின் பேசினார்.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் , சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மாதவரம், கொளத்துார் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும், தன் மகன் உதயநிதியை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது: என் மகன் உதயநிதியை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன். இந்த நேரத்தில், ஆயிரம் விளக்கில் நான் முதல் முதலாக போட்டியிட்ட போது, கருணாநிதி எனக்காக பிரசாரம் செய்தது ஞாபகம் வருகிறது.'என் தொகுதிக்கு வர வேண்டாம்; வெற்றி உறுதி' என, உதயநிதி கூறினார்.

TN elections 2021, DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்


தொகுதி மக்கள் என்னை கேள்வி கேட்பார்கள் என்பதால், இங்கே பிரசாரம் செய்ய வந்தேன். இந்த தொகுதியில், கருணாநிதி, அன்பழகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களை போல கருணாநிதியின் பேரன், உதயநிதி இங்கு வேட்பாளராக போட்டியிடுகிறார். நாளிதழ்கள், ஊடகங்களில் வரும் கருத்து கணிப்புகளை பார்த்து, தோல்வி பயத்தில், ஆளும் கட்சி கூட்டணி, 'தினமலர்' உட்பட பல்வேறு நாளிதழ்களில், விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில், தி.மு.க., ஆட்சியில் நடந்த நில ஆக்கிரமிப்பு,கடை உடைப்பு போன்ற அக்கிரமங்கள் என, செய்தி போல தயாரித்து, விளம்பர வடிவில் வெளியிட்டுள்ளனர்.இதை படிப்பவர்கள், அந்த சம்பவங்கள் இன்று, நடந்ததாக நினைப்பார்கள். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.கடந்த, 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தது. அந்த சம்பவங்களில் உண்மை இருந்தால், ஏன் வழக்கு பதிவு செய்து, அதை நிருபிக்கவில்லை.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் விளம்பரம் கொடுத்து, மக்களை குழப்ப நினைக்கிறார்கள். அவர்கள் கனவு நிறைவேறாது. அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்று விடக்கூடாது.சமீபத்தில் தி.மு.க.,வை பயமுறுத்த, என் மகள் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்தது. அங்கு வந்த அதிகாரிகள், வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டே டீ குடித்தனர். மதியம் பிரியாணி சாப்பிட்டு விட்டு போகும் போது, உங்களுக்கு கூடுதலாக, 25, 'சீட்' கிடைக்கும் என்று, சொன்னார்கள்.

அதே போல, தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுபவர்கள் வீடுகளில் நடந்த ரெய்டிலும், அதே நிலை தான் ஏற்பட்டது.துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவம், பெண் போலீஸ் ஐ.பி.எஸ்., மீது கூடுதல் டி.ஜி.பி., பாலியல் அத்துமீறல் போன்ற, 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசில் நடந்த சம்பவங்களை எல்லாம் மறைக்கத் தான், அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


'தமிழகம் எங்க ஏரியா; பா.ஜ., நுழைய முடியாது!'


சென்னை, துறைமுகம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:தன் உயிரை பற்றி கூட கவலைப்படாமல், உயிரை பணயம் வைத்து, கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர், சேகர்பாபு. தி.மு.க.,வை அழித்து ஒழிக்க, பா.ஜ., முயற்சி செய்கிறது. பிரசாரத்திற்கு பிரதமர் மோடி வந்தாலும், 'ஜீரோ' தான்; உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும், 'ஜீரோ' தான்; தி.மு.க., தான், 'ஹீரோ'

வேறு மாநிலத்தில், பா.ஜ., கனவு பலிக்கும். தமிழகத்தில், மோடி மஸ்தான் வேலை எடுபடாது. தமிழகம், எங்கள் ஏரியா; பா.ஜ., நுழைய முடியாது.ஜெயலலிதா இறந்தது, மர்மமாகவே இருக்கிறது. நம் உறவினர்கள், நண்பர்கள் இறந்தால், எப்படி என துக்கம் விசாரிப்போம். காரணம் தெரிந்து, ஆறுதல் சொல்வோம். யாரோ இறந்தால் கூட ஆறுதல் சொல்கிறோம். ஜெயலலிதா, நமக்கு முதல்வராக இருந்தவர். இதுவரைக்கும் எப்படி இறந்தார் என, தெரியவில்லை.

ஜெ., மறைவிற்கு பின், பன்னீர்செல்வம் ., தியானம் செய்து, ஆவியுடன் எல்லாம் பேசி, விசாரணை கேட்டார். அதை ஏற்று, விசாரணை கமிஷன் அமைத்தார், முதல்வர். மூன்றரை ஆண்டுகளாகியும் உண்மை வெளிவரவில்லை.உண்மையை, அ.தி.மு.க., மூடி மறைக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., தொண்டர்களுக்காக, உண்மையை வெளிக்கொண்டு வருவேன்.தவழ்ந்து சென்று முதல்வரானார், பழனிசாமி., என, நான் விமர்சித்தால், 'நான் என்ன பாம்பு, பல்லியா' என கேட்கிறார். அவற்றை விட,பழனிசாமி., விஷம் நிறைந்தவர். அவரை முதல்வர் ஆக்கியவருக்கு துரோகம் செய்துள்ளார்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...