Monday, May 31, 2021

எண் 8.

8,17,26

எட்டு என்ற எண்ணை
எட்ட யாரும் விரும்பமாட்டார்கள்
காரணம்
எண் கணிதத்தில்
எட்டு
ஸ்ரீ சனீஸ்வர பகவானின் ஆதிக்க எண்
ஸ்ரீ சனீஸ்வர பகவான் என்றாலே சிக்கலானவன் என்று
ஒரு மூடநம்பிக்கை, பயம்
யாருக்கும் இருக்கும்
ஸ்ரீ சனீஸ்வர பகவான்
கண்டிப்பானவன் -
கொடுப்பதிலும் சரி
கணக்கை முடிப்பதிலும் சரி
கூட்டு எண் 8
இதில்
பிறந்தவர்கள் சிக்கலானவர்கள்
இயற்கை விரும்பிகள்
வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தவர்கள் .....
இப்படயெல்லாம் எண் கணித வியாபாரிகள்
வாய்ப்பந்தல் போடுவார்கள்
ஆனால்,
பாருங்கள்
எட்டில் புதைந்திருக்கும்
புதையலை
×××
திக்குகள் எட்டு
கிழக்கு
தென் கிழக்கு
தெற்கு
தென் மேற்கு
மேற்கு
வட மேற்கு
வடக்கு
வட கிழக்கு
×××
சுபீக்ஷத்தை அருளும் அஷ்டலக்ஷ்மி
1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி
நோயற்ற ஆரோக்யம் அருள்பவள்
2. ஸ்ரீ தான்யலக்ஷ்மி
உணவுத் தானியங்கள் அருள்பவள்
3. ஸ்ரீ தைர்யலக்ஷ்மி
இடர்களை எதிர்கொள்ள அருள்பவள்
4. ஸ்ரீ கஜலக்ஷ்மி
நற்பாக்கியங்களை அருள்பவள்
5. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி
மழலை பாக்கியம் அருள்பவள்
6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி
வெற்றியை அருள்பவள்
7. ஸ்ரீ வித்யாலக்ஷ்மி
ஞானத்தை அருள்பவள்
8. ஸ்ரீ தனலட்சுமி
செல்வத்தை அருள்பவள்
×××
அஷ்ட பைரவர்கள்
தாருகாவனத்து ரிஷிகள்
ஆணவத்தால்
ஈசன் எதிர்த்தார்கள்
ஈசன் பிக்ஷாடன மூர்த்தியாக வடிவம் கொண்டார்
கடும் கோபம் கொண்ட ஈசன்
காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார்
இதனால் உலகம் முழுக்க
இருள் சூழ்ந்து
சூரியனும் மறைந்து போனான்
பைரவ மூர்த்தியே
எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார்
இப்படி எட்டுவிதமாகத்
தோன்றிய பைரவர்கள்
அஷ்ட பைரவர்கள்
(க்ஷேத்ர பாலகர்கள்)
என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள்
இவர்கள் ...
ருரு பைரவர்
சண்ட பைரவர்
குரோதன பைரவர்
உன்மத்த பைரவர்
சம்ஹார பைரவர்
பீக்ஷன பைரவர்
கபால பைரவர்
கால பைரவர்
என எட்டு பைரவர்கள்
××××
எட்டெழுத்து மந்திரம்
ஓம் நமோ நாராயணாய
×××
எட்டாவது திதி
அஷ்டமியில் பிறந்தவன்
பரந்தாமன்
×××
திருக்குறளில் அறத்துப்பால் பிரிவில்
திருவள்ளுவர்
எண் குணத்தான்
என்று குறிப்பிடுகிறார்
திருக்குறள்: 9
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
The Praise of God
"கோளில் பொறியின் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை
என் குணம் கொண்டவனை வணக்குவதே தலை
Before His foot,
'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead
×××
What are the Eight-fold Excellence ...
1. நன்மொழி - Right Speech
2. நற்செயல் - Right Conduct
3. நன்னெறி - Right Livelihood
4. நன்முயற்சி - Right Effort
5. நல்லெண்ணம் - Right
Mindfulness
6. நல்லறம் - Right Intention
7. நல்நோக்கம் - Right View
8. நல்லறிவு - Right Insight
×××
பகவானை எண்குணத்தான் என்கிறார் திருவள்ளுவர்
எண்குணங்கள் என்னென்ன
1. தன்வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின்
நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை
இப்படி எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழாதவனின் தலை
மரணமுற்றவனின் தலை என்கிறார்
இது எதற்கு ஒப்பானது என்றால்
சுவையறியா
ஐந்து பொறிகளுக்கு ஒப்பாகும்
ஐந்து பொறிகள்:
1 வாய்
2 காணாத கண்
3 நுகரா மூக்கு
4 கேளாச் செவி
5 உணர்வற்ற உடல்
செயல்படாத மூளை
மரணித்த தலை என்கிறார்
பகவானை வணங்காதவன்
அறிவற்றவன் என்கிறார் திருவள்ளுவர்
×××
சைவ ஆகமத்தில்
தியானத்தால் அடையக்கூடிய
அஷ்ட சித்திகள் கூறப்பட்டுள்ளன
1. அணிமா
2. மகிமா
3. கரிமா
4. லகிமா
5. பிராத்தி
6. பிராகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்
×××
சமண சமயம் கோட்பாடுகள்
கூறும் எட்டு குணங்கள்
1. கடையிலா அறிவு
2. கடையிலாக் காட்சி
3. கடையிலா வீரியம்
4. கடையிலா இன்பம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. ஆயுள் இன்மை
8. அழியா இயல்பு
×××
சைவ சமயம் எண் குணங்கள்
1 தன்வயத்தம்
2 தூய்மை
3 இயற்கையறிவு
4 முற்றறிவு
5 கட்டின்மை
6 பேரருள்
7 எல்லாம் வன்மை
8 வரம்பிலின்பம்
×××
எட்டுக் குணங்களுடைய
சிவனின்
சிவந்த தாளை வணங்காத தலை சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம்
அத்த எட்டு குணங்கள்
1. அனந்த ஞானம்
2. அனந்த வீரியம்
3. அனந்த குணம்
4. அனந்த தெரிசனம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. அவாவின்மை
8. அழியாவியல்பு
×××
'சூடாமணி நிகண்டு'
என்னும் சமண நூல் எட்டு வினைகளைக் குறிப்பிடுகிறது
1. ஞானாவரணீயம்
2. தர்சனாவரணீயம்
3. மோகனீயம்
4. அந்தராயம்
5. வேதனீயம்
6. ஆயுஷ்யம்
7. நாமம்
8. கோத்திரம்
இதில்
முதல் நான்கு வினைகள்
'காதி'
அடுத்த நான்கு வினைகள்
'அகாதி'
என்று சொல்லப்படுகிறது
ஆன்மாவின் இயற்கையான இயல்பான குணங்களை
மறைக்கும் இந்த வினைகளை
வெல்வதற்கு உபாயம்
இந்த எண் குணங்கள்
×××
திருக்குறள் என்னும் வேத நூலின்
அமைப்பு
திருவள்ளுவர்
எட்டு குணங்கள் எவை என்று பொருள்பட முறையை அமைத்திருக்கிறார்
முதல் அதிகாரத்தில் வணங்குதற்குரிய இறைவனை வரிசைப்படுத்துகிறார்
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இருவினையும் சேரா இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்
இந்த வரிசையில்
ஒன்பதாவது குறளாக ‘எண்குணத்தான்’
என்று குறிப்பிடுகிறார்
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...